ஜனவரி 28ம் தேதி பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!!

1
ஜனவரி 28ம் தேதி பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!!
ஜனவரி 28ம் தேதி பொது விடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு!!
ஜனவரி 28ம் தேதி பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு!!

தமிழகம் முழுவதும் வரும் ஜனவரி 28ம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் அந்நாள் பொது விடுமுறை விடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து உள்ளார். மேலும் இனி வரும் ஆண்டுகளிலும் தைப்பூச நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

பொது விடுமுறை:

தமிழகம், கேரளா மட்டுமின்றி இந்தோனேஷியா, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ், இலங்கை என பல நாடுகளிலும் தமிழ் கடவுளாகிய முருக பெருமானின் தைப்பூசத்திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மேலும் இலங்கை, மொரீஷியஸ் ஆகிய நாடுகளில் அந்நாள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டு உள்ளது. எனவே முருகனின் அறுபடை வீடு உள்ள தமிழகத்திலும் தைப்பூச திருவிழாவின் போது பொங்கல் விடுமுறை விடப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரி வந்தனர்.

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் – தமிழக அரசு அறிவிப்பு!!

இந்த கோரிக்கையை பரிசீலித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது மக்கள் தைப்பூச திருவிழாவிற்கு பொது விடுமுறை விடப்பட வேண்டும் என என்னிடம் கோரிக்கை வைத்தனர் என தெரிவித்து உள்ளார். இதனை ஏற்று வரும் ஜனவரி 28ம் தேதி பொது விடுமுறையாக தற்போது அரசு சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

TNPSC குரூப் 1 தேர்வில் 6 தவறான வினாக்கள் – மதிப்பெண்கள் வழங்க தேர்வர்கள் கோரிக்கை!!

மேலும் இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழாவினை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டு உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!