ஜன் தன் யோஜனா திட்டத்தால் மிகப்பெரிய மாற்றம் – பிரதமர் மோடி பெருமிதம்

0

ஜன் தன் யோஜனா திட்டத்தால் மிகப்பெரிய மாற்றம் – பிரதமர் மோடி பெருமிதம்

பிரதமர் ஜன் தன் யோஜனா திட்டம் தொடங்கி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இத்திட்டம் நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

59 கோடிக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள்

2014-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜன் தன் திட்டத்தின் கீழ் தற்போது நாடு முழுவதும் 59.09 கோடி வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இவற்றில் ரூ.3.17 லட்சம் கோடி வைப்புத் தொகை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கணக்குகளில் சுமார் 56 சதவீதம் பெண்களுக்கும், 78 சதவீதம் கிராமப்புற மற்றும் அரை நகர்ப்புற பகுதிகளிலும் உள்ளன.

முக்கிய சலுகைகள்

ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலான விபத்துக் காப்பீடு, அவசர தேவைகளுக்காக ரூ.10,000 வரை மிகைப்பற்று வசதி மற்றும் இலவச ரூபே அட்டை உள்ளிட்ட வசதிகள் வழங்கப்படுகின்றன.

வங்கிச் சேவையை அனைவருக்கும் கொண்டு செல்வதில் ஜன் தன் யோஜனா முக்கிய பங்கு வகித்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நிதி உள்ளடக்கத்தை விரிவுபடுத்தும் இந்தத் திட்டம், கடந்த 12 ஆண்டுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!