
மக்களே..போஸ்ட் ஆபீஸின் “RD சேமிப்பு திட்டம்” பற்றி தெரியுமா…?? அப்போ உடனே இத படிச்சு தெரிஞ்சுக்கோங்க
தபால் நிலையத்தில் அனைவருக்கும் பயன்படக்கூடிய பல்வேறு விதமான சேமிப்பு திட்டங்கள் உள்ளன. அதில், நீங்கள் எந்த சேமிப்பு திட்டத்தை தேர்ந்தெடுத்தால் அதிக லாபம் பெறலாம் என்று தெரிந்து கொண்டு கணக்கு தொடங்க வேண்டும். அந்தவகையில், தற்போது போஸ்ட் ஆஃபீஸின் “ரெக்கரிங் டெபாசிட் (RD)” என்ற அருமையான சேமிப்பு திட்டம் குறித்து இந்த பதிவில் விரிவாக காண்போம். அதாவது, இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச முதலீடாக மாதந்தோறும் ரூ. 100 செலுத்தி கணக்கு தொடங்கலாம். குறிப்பாக, அதிகபட்ச முதலீட்டு வரம்பு எதுவும் கிடையாது.
X நிறுவனத்தை விற்ற எலான் மஸ்க்…!! தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் செலுத்த பெரிய ஸ்கெட்ச் என தகவல்..!!
மேலும், இத்திட்டத்தில் அதிகபட்சமாக 6.7% வட்டிவிகிதம் அளிக்கப்படுகிறது. இதன், முதிர்வு காலம் 5 ஆண்டுகள் ஆகும். மேலும், இத்திட்டத்தில் விண்ணப்பிக்க வயது வரம்பும் கிடையாது. உதாரணமாக, இந்த RD திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ. 2,800 முதலீடு செய்தால், ஐந்து ஆண்டுகளில் முதிர்வு தொகையாக வட்டியுடன் சேர்த்து ரூ. 1,99,824 கிடைக்கும். இதற்கு, வட்டி தொகை மட்டும் ரூ. 31,824 அளிக்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தில் இணைய விருப்பமுள்ளவர்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தில் முழு விவரங்களையும் தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

























