IPL 2025 : DC vs LSG கடைசி நிமிடம் வரை பரபரப்பை அதிகரித்த போட்டி.. டெல்லி அணியின் ஹீரோவான அஷூதோஷ் சர்மா..

0
IPL 2025 : DC vs LSG கடைசி நிமிடம் வரை பரபரப்பை அதிகரித்த போட்டி.. டெல்லி அணியின் ஹீரோவான அஷூதோஷ் சர்மா..
IPL 2025 : DC vs LSG கடைசி நிமிடம் வரை பரபரப்பை அதிகரித்த போட்டி.. டெல்லி அணியின் ஹீரோவான அஷூதோஷ் சர்மா..

IPL 2025 : DC vs LSG கடைசி நிமிடம் வரை பரபரப்பை அதிகரித்த போட்டி.. டெல்லி அணியின் ஹீரோவான அஷூதோஷ் சர்மா.

 

2025 ஆம் ஆண்டுக்கான IPL தொடரின் நான்காவது லீக் போட்டி நேற்று (24-03-2025) விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதை தொடர்ந்து, டெல்லி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று முதலில் பந்துவீச முடிவு செய்தார். அதன்படி “முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் எடுத்தது.  பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 19.3 ஓவர்களில் 211 ரன்கள் குவித்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது”.

உங்களுக்கு “முதலமைச்சரின் உழவர் அட்டை” பற்றி தெரியுமா…?? கொட்டி கிடக்கும் சலுகைகள்…உடனே விண்ணப்பம் செய்யுங்கள்

இந்நிலையில் “லக்னோ அணியின் பேட்டிங்கில் நிக்கோலஸ் பூரன் 30 பந்துகளில் 75 ரன்களும், மிட்செல் மார்ஷ் 36 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தனர். மேலும், டெல்லி அணியின் பக்கம் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸுடன் 48 ரன்களும் விப்ராஜ் நிகம் 55 ரன்கள் குவித்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தார். அதன் பின்னர் இறுதியாக களமிறங்கிய டெல்லி அணியின் இம்பாக்ட் பிளேயரான அஷுதோஷ் சர்மா 31 பந்துகளில் 66 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் டெல்லி அணியை வெற்றி பெற வைத்தார். மேலும், கடந்த வருடம் பஞ்சாப் அணிக்காக விளையாடிய இவர் மீது எதிர்பார்ப்புகள் குறைவாக இருந்த நிலையில் நேற்றைய போட்டிக்கு பின்னர் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையம் ஈர்த்துள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!