IPL 2021: ஜோஸ் பட்லருக்கு பதிலாக க்ளென் பிலிப்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் மாஸ்டர் பிளான்!

0
IPL 2021: ஜோஸ் பட்லருக்கு பதிலாக க்ளென் பிலிப்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மாஸ்டர் பிளான்!
IPL 2021: ஜோஸ் பட்லருக்கு பதிலாக க்ளென் பிலிப்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் மாஸ்டர் பிளான்!
IPL 2021: ஜோஸ் பட்லருக்கு பதிலாக க்ளென் பிலிப்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் மாஸ்டர் பிளான்!

நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஜோஸ் பட்லருக்கு பதிலாக க்ளென் பிலிப்ஸை ஒப்பந்தம் செய்துள்ளது. அதிரடி பேட்ஸ்மேன் ஆன க்ளென் பிலிப்ஸ் களமிறங்குவதால் சிக்ஸர்களுக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

ஐபிஎல் அப்டேட்ஸ்:

கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. முதல் போட்டியிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத உள்ளன. இதற்காக வீரர்கள் UAE சென்று பயிற்சியை தொடங்கி உள்ளனர். சொந்த காரணம், சர்வதேச போட்டிகள், கொரோனா அச்சம் போன்றவற்றால் சில வீரர்களால் ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் அணி நிர்வாகங்கள் மாற்று நட்சத்திர வீரர்களை தேர்ந்தெடுக்கும் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன.

அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இங்கிலாந்து அதிரடி பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லருக்கு பதிலாக நியூசிலாந்து விக்கெட் கீப்பர்-க்ளென் பிலிப்ஸை ஒப்பந்தம் செய்துள்ளது. ஜோஸ் பட்லருக்கு 2வது குழந்தை பிறந்த காரணத்தால் அவர் எஞ்சிய சீசனில் இருந்து விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேற்கிந்திய தீவுகளில் அடுத்த வாரம் தொடங்கும் சிபிஎல் தொடருக்காக பார்படோஸ் ராயல்ஸ் அணியில் பிலிப்ஸ் விளையாட உள்ளார். அதன் பின்னர் செப்டம்பர் 19 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் சேர திட்டமிட்டுள்ளார். சர்வதேச அரங்கில் 25 T 20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் உள்ளவர் பிலிப்ஸ்.

IND vs ENG 3வது டெஸ்ட் – இந்திய அணியில் ஜடேஜாவிற்கு பதில் அஷ்வின்?

கடந்த நவம்பரில், பிலிப்ஸ் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 46 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் கொலின் முன்ரோவின் சாதனையை அவர் முறியடித்தார். இதனால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கிற்கு அசுர பலம் கிடைத்துள்ளதாக ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ராஜஸ்தான் அணியில் இருந்து ஜோஃப்ரா ஆர்ச்சர் முழங்கை எலும்பு முறிவினால் விலகி உள்ளார். மேலும் பென் ஸ்டோக்ஸ் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் ராஜஸ்தான் அணி 3 இங்கிலாந்து நட்சத்திர வீரர்கள் இல்லாமல் களமிறங்க உள்ளது. புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ள ராஜஸ்தான் ராயல்ஸ், செப்டம்பர் 21 அன்று பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!