iPhone & Android பயனர்கள் கவனத்திற்கு – ஹேக் தொடர்பான எச்சரிக்கை! முழு விவரம் இதோ!

0
iPhone & Android பயனர்கள் கவனத்திற்கு - ஹேக் தொடர்பான எச்சரிக்கை! முழு விவரம் இதோ!
iPhone & Android பயனர்கள் கவனத்திற்கு – ஹேக் தொடர்பான எச்சரிக்கை! முழு விவரம் இதோ!

தற்போது ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களின் ஸ்மார்ட்போன்களை உளவு பார்க்க ஒரு இத்தாலிய நிறுவனத்தின் ஹேக்கிங் கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.

எச்சரிக்கை பதிவு

பெருமளவு மக்களால் பயன்படுத்தப்படும் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு போன்கள் ஆபத்தில் இருப்பதாக அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளிவந்துள்ள அறிக்கையின்படி, இலக்கு வைக்கப்பட்ட சாதனங்களின் தனிப்பட்ட செய்திகள் மற்றும் தொடர்புகளை உளவு பார்க்க ஒரு கருவி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, இத்தாலி மற்றும் கஜகஸ்தானில் ஆப்பிள் இன்க் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை உளவு பார்க்க இத்தாலிய நிறுவனத்தின் ஹேக்கிங் கருவிகள் பயன்படுத்தப்பட்டதாக ஆல்பாபெட் இன்க் இன் கூகுள் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இது குறித்த அறிக்கையின்படி, மிலனை தளமாகக் கொண்ட RCS ஆய்வகம், இலக்கு வைக்கப்பட்ட சாதனங்களின் தனிப்பட்ட செய்திகள் மற்றும் தொடர்புகளை உளவு பார்ப்பதற்கான கருவிகளை உருவாக்கி இருப்பதால், கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்துபவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், ஸ்பைவேர் குறித்து அவர்களை எச்சரித்ததாகவும் கூறியுள்ளது. மேலும் இந்த பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த ஆப்பிள் செய்தித் தொடர்பாளர், இந்த ஹேக்கிங் பிரச்சாரத்துடன் தொடர்புடைய அனைத்து அறியப்பட்ட கணக்குகள் மற்றும் சான்றிதழ்களை நிறுவனம் திரும்பப் பெற்றதாகக் கூறி இருக்கிறார்.

ஏர் இந்தியா நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் வேலை!

மறுபக்கத்தில் RCS ஆய்வகம், அதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள், ஐரோப்பிய விதிகளுக்கு இணங்குவதாகவும், குற்றங்களை விசாரிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களை அமைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளை ஒடுக்க சில சந்தர்ப்பங்களில் இதுபோன்ற கருவிகளைப் பயன்படுத்துவதற்கு அரசாங்கங்களுக்கு உதவுவதற்காக இது போன்ற ஹேக்கிங் சாதனம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களது சாதனங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!