
உங்கள் சேமிப்பு தொகையை சரியான திட்டத்தில் முதலீடு செய்யனுமா..? அப்போ போஸ்ட் ஆபீஸின் இந்த திட்டம் பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..
இந்தியாவில் உள்ள தனியார் மற்றும் அரசு வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பணம் டெபாசிட், வைப்புத் தொகைக்கான பாதுகாப்பு மற்றும் உடனடி கடன் உட்பட பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றன. அந்த வகையில் போஸ்ட் ஆபீஸ் கடிதங்கள் மற்றும் பொருட்களை அனுப்புவது மட்டுமின்றி நிதி சேவைகளையும் வழங்குகிறது. இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ் வழங்கும் ஒரு சிறப்பு திட்டம் பற்றி இப்பதிவில் காண்போம்.
இனி ஆண்டுக்கு 15 சிலிண்டர் மட்டுமே வாங்க அனுமதி…அதிரடி கட்டுப்பாடுகளால் மக்கள் அதிர்ச்சி
அதாவது, போஸ்ட் ஆபீஸின் நேர வைப்பு (TD) திட்டம் முற்றிலும் வங்கி போலவே இயங்குகிறது. இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 1 வருடம் முதல் அதிகபட்சமாக 5 வருடம் வரை முதலீடு செய்யலாம். மேலும், ரூ.1,000 வைத்து இத்திட்டத்தில் கணக்கைத் தொடங்கலாம். இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு 6.9% முதல் 7.5% வரை வட்டி கிடைக்கும். இந்த TD திட்டத்தில் 2 வருடத்திற்கு ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் எந்தவித ரிஸ்க்கும் இல்லாமல் உங்களுக்கு வட்டி மட்டுமே ரூ.29,776 கிடைக்கும். இதை தொடர்ந்து, நேர வைப்பு கணக்கை தனியாகவோ அல்லது ஜாயிண்ட் அக்கவுண்டகவோ திறக்கலாம். மேலும், ஒரு வாடிக்கையாளர் தனது ஜாயிண்ட் அக்கவுண்டில் அதிகபட்சம் 3 நபர்கள் வரை சேர்த்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

























