தமிழக அரசு மருத்துவமனையில் புதிய வசதி அறிமுகம் – கர்ப்பிணிகளுக்கு சிறப்பு ஏற்பாடு!

0
தமிழக அரசு மருத்துவமனையில் புதிய வசதி அறிமுகம் - கர்ப்பிணிகளுக்கு சிறப்பு ஏற்பாடு!
தமிழக அரசு மருத்துவமனையில் புதிய வசதி அறிமுகம் - கர்ப்பிணிகளுக்கு சிறப்பு ஏற்பாடு!
தமிழக அரசு மருத்துவமனையில் புதிய வசதி அறிமுகம் – கர்ப்பிணிகளுக்கு சிறப்பு ஏற்பாடு!

குறைபாடுகளுடன் இருக்கும் குழந்தைகளை 9 வாரத்தில் இருந்தே கண்டறியும்படியான புதிய அதிநவீன கருவி அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன்மூலமாக குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தையின் விகிதம் குறையும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரத்த பரிசோதனை:

நாடு முழுவதும் மனிதனின் குறைகள் எளிதில் கண்டறியும்படியான அதிநவீன கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது கர்ப்பிணிகளுக்கு ரத்த பரிசோதனை செய்வதன் மூலமாகவே வயிற்றில் இருக்கும் குழந்தையின் குறைபாடுகளை கண்டறியும்படியான அதிநவீன கருவி சுமார் 1 கோடி ரூபாய் செலவில் சென்னையில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே 5 மாதத்திற்கு பிறகு தான் கருவில் இருக்கும் குழந்தைகளின் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

Exams Daily Mobile App Download

ஆனால், இந்த அதிநவீன கருவி மூலமாக 9 வாரங்களில் இருந்தே குழந்தையின் குறைபாடுகள் கண்டறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே AutoDELFIA எனப்படும் இந்த கருவி தனியார் கார்ப்ரேட் மருத்துவமனைகளில் பயன்பாட்டில் இருந்து வருகிறது. தற்போது தான் முதன் முறையாக சென்னை ஓமந்தூதாரர் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு மருத்துவமனையில் பொருத்தப்பட்டுள்ளது.

TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகுமா? முக்கிய தகவல்!

அதாவது, autodelfia maternal analyzer கருவி மூலமாக ஒரே நேரத்தில் 100 ரத்த மாதிரிகளுக்கு சோதனை செய்யப்பட்டு 2மணி நேரத்தில் முடிவையும் அறிவிக்க முடியும். மேலும், இந்த கருவி மூலமாக குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளை 9 வாரங்களிலேயே கண்டறிந்து சரிபடுத்திக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரத்த பரிசோதனை மூலம் கருவின் நிலையை அறிதல் தொடர்பான போதிய விழிப்புணர்வு கர்ப்பிணிகளுக்கு இல்லை எனவும், இந்த அதிநவீன கருவியின் சேவையை கர்ப்பிணிகள் பயன்படுத்திக்கொள்ளும்படியும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!