TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகுமா? முக்கிய தகவல்!

0
TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகுமா? முக்கிய தகவல்!
TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகுமா? முக்கிய தகவல்!
TNPSC Group 2 & 2A தேர்வு முடிவுகள் இந்த மாதம் வெளியாகுமா? முக்கிய தகவல்!

தமிழகம் முழுவதும் திட்டமிட்டபடி கடந்த மே 21 ஆம் தேதி நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகளுக்கான தேதியை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எப்போது அறிவிக்கும் என தேர்வர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, தேர்வர்கள் முடிவுகளை எப்படி சரிபார்ப்பது என்பதையும் இந்த பதிவில் பார்க்கலாம்.

தேர்வு முடிவுகள்:

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள சுமார் 5529 பணியிடங்களுக்கு கடந்த மே 21 ம் தேதி நடத்தப்பட்ட குரூப் 2 மற்றும் 2A தேர்வில் சுமார் 13 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், 11 லட்சம் பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். மேலும் 1.83 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதவில்லை எனவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், TNPSC குரூப் 2 மற்றும் 2A தேர்வு எழுதிய சுமார் 11 லட்ச விண்ணப்பதாரர்கள், தங்களின் தேர்வு முடிவுக்காக காத்திருக்கின்றனர். மேலும் குரூப் 2 மற்றும் 2A தேர்வுக்கான முடிவுகள் கடந்த ஜூன் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் என தேர்வாணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

Exams Daily Mobile App Download

ஆனால், குரூப் 2 -க்கான எந்த தகவல்களையும் தற்போது தேர்வாணையம் வெளியிடவில்லை. அத்துடன், குரூப் 2 -க்கான மெயின் தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான கலந்தாய்வு மற்றும் நேர்முகத் தேர்வு டிசம்பர் 2022 முதல் ஜனவரி 2023 -க்குள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு பதவிக்கும் 10 மடங்கு விண்ணப்பத்தாரர் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். எனவே,TNPSC வெளியிட்ட உத்தேச விடைகள் மூலம் தேர்வர்கள் தங்களை மதிப்பீடு செய்து கொண்டு உடனடியாக முதன்மைத் தேர்வுக்கு தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் இந்த மாதம் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என விண்ணப்பதாரர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – உடனே பாருங்க !

              வகை                 BOYS கட் ஆஃப் மார்க்              GIRLS கட் ஆஃப் மார்க்

பொதுப்பிரிவினர்        158-163                                      155-160

BC                               153-158                                      147-152

MBC                             151-156                                      145-150

BC (M)                          147-152                                     140-145

SC                                145-150                                     147-152

SC (A)                          145-150                                      138-143

ST                                145-150                                      138-143


TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகளை எப்படி சரிபார்க்கலாம்?

  • முதலில் TNPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ ஐப் பார்வையிட வேண்டும்.
  • முக்கியமான இணைப்புகள் பிரிவின் கீழ் “latest results/Result declaration schedule” என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்.
  • TNPSC முடிவுகள் குறித்த பல்வேறு அறிவிப்புகள் கிடைக்கும் பக்கத்திற்கு நீங்கள் அனுப்பப்படுவீர்கள்.
  • அதில், 21.05.2022 அன்று நடைபெற்ற முதல்நிலைத் தேர்வுக்கான TNPSC குரூப் 2 முடிவை 2022 ல் தேடவும்.
  • TNPSC Group 2 Result 2022 -க்கான இணைப்பைக் கிளிக் செய்து உங்கள் உள்நுழைவு விவரங்களைச் சமர்ப்பிக்கவும்.
  • சமர்ப்பி என்பதைக் கிளிக் செய்த பிறகு, உங்கள் TNPSC குரூப் 2 பிரிலிம்ஸ் தேர்வு முடிவுகள் திரையில் கிடைக்கும். TNPSC குரூப் 2 முதன்மைத் தேர்வுக்கான உங்கள் தகுதி நிலையைப் பதிவிறக்கிச் சரிபார்க்கவும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!