ஆதார் எண்ணை பாதுகாக்க புதிய திட்டம் அறிமுகம் – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்!

0
ஆதார் எண்ணை பாதுகாக்க புதிய திட்டம் அறிமுகம் - பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்!
ஆதார் எண்ணை பாதுகாக்க புதிய திட்டம் அறிமுகம் - பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்!
ஆதார் எண்ணை பாதுகாக்க புதிய திட்டம் அறிமுகம் – பதிவிறக்கம் செய்யும் வழிமுறைகள்!

ஆதார் கார்டில் இருக்கும் 12 இலக்க எண்ணை வைத்து பல மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் என்கிற ஒரு திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. தற்போது இதனை எவ்வாறு பதிவிறக்கம் செய்வது என்பது குறித்தான முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாஸ்க் செய்யப்பட்ட ஆதார்:

இந்திய குடிமகன் என்பதற்கு முக்கிய ஆதாரமாக ஆதார் கார்டு விளங்கி வருகிறது. இது மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. மேலும், ஆதார் கார்டை வைத்து பலரும் ஆன்லைன் வழியாக மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆதாரில் உள்ள 12 இலக்க ஆதார் எண்ணை பயன்படுத்தி வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். அவசியமில்லாமல் எக்காரணம் கொண்டும் யாரிடமும் ஆதார் கார்டில் இருக்கும் 12 இலக்க எண்ணை பகிர கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இதனால், ஆதார் கார்டில் இருக்கும் 12 இலக்க எண் யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதற்காக மத்திய அரசு மாஸ்க் செய்யப்பட்ட ஆதார் என்னுடன் ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் வாயிலாக ஆதார் கார்டில் இருக்கும் கடைசி நான்கு எண்கள் மட்டுமே தெரியும். இந்த மாஸ்க்டு ஆதாரை யுஐடிஏஐ இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் பெறுவதற்கும் இந்த மாஸ்க் செய்யப்பட்ட ஆதாரையே பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

PM Kisan திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – ‘இதை’ சமர்ப்பித்தால் தான் பணம்! முழு விவரம் இதோ!

தற்போது எப்படி மாஸ்க் செய்யப்பட்ட ஆதாரை ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்வது என்பதை பார்க்கலாம். முதலில் https://eaadhaar.uidai.gov.in/ என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று உங்களது ஆதார் எண்ணின் 12 இலக்க எண்ணையும் பதிவிட வேண்டும். பின்னர், அதிலுள்ள மாஸ்க் ஆதார் சேவை என்கிற பகுதியை கிளிக் செய்யவும். பின்னர், பேக்சா வெரிபிகேசனை பதிவு செய்து ஓடிபி எண் பகுதியை கிளிக் செய்யவும். பின்னர், ஆதார் கார்டில் பதிவிடப்பட்ட மொபைல் எண்ணிற்கு ஓடிபி வரும். அதனையும் பதிவு செய்தால் மாஸ்க் செய்யப்பட்ட ஆதாரை பதவிறக்கம் செய்துகொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!