PM Kisan திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – ‘இதை’ சமர்ப்பித்தால் தான் பணம்! முழு விவரம் இதோ!

0
PM Kisan திட்ட பயனாளிகள் கவனத்திற்கு - 'இதை' சமர்ப்பித்தால் தான் பணம்! முழு விவரம் இதோ!
PM Kisan திட்ட பயனாளிகள் கவனத்திற்கு - 'இதை' சமர்ப்பித்தால் தான் பணம்! முழு விவரம் இதோ!
PM Kisan திட்ட பயனாளிகள் கவனத்திற்கு – ‘இதை’ சமர்ப்பித்தால் தான் பணம்! முழு விவரம் இதோ!

நாட்டில் பல திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. சுகாதாரம், வேலைவாய்ப்பு, காப்பீடு மற்றும் நிதிப் பலன்கள் போன்ற பல்வேறு திட்டங்கள் அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. அதில் ஒன்றுதான் பிரதம மந்திரி கிசான் சன்மான் நிதி யோஜனா திட்டம். இந்நிலையில் பி.எம்.கிசான் பதிவு செய்வதில் நடக்கும் அதிக முறைகேடுகளை தடுக்க, முக்கிய ஆவணம் ஒன்றை அரசு கட்டாயமாக்கியுள்ளது.

புதிய விதி:

பி.எம்.கிசான் திட்டத்தின் கீழ் வரும் ஒவ்வொரு விவசாய குடும்பமும், தலா ரூ.2,000 வீதம் மூன்று தவணைகளில், அரசிடமிருந்து ஆண்டுக்கு ரூ.6,000 பெற தகுதியுடையவர்கள். இது ஆண்டு முழுவதும் மூன்று காலாண்டு தவணைகளில் வழங்கப்படுகிறது. சமீபத்தில், பிரதமர் கிசான் யோஜனா திட்டத்தின் 11வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். 10 கோடிக்கும் அதிகமான பயனாளிகளின் கணக்குகளுக்கு பணம் அனுப்பி வைக்கப்பட்டது. அதாவது மே 31, 2022 அன்று பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ரூ.2000 விவசாயிகள் குடும்பங்களுக்கு வந்து சேர்ந்தது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Exams Daily Mobile App Download

மேலும் PM KISAN பதிவு செய்த விவசாயிகளுக்கு eKYC கட்டாயமாகும். OTP அடிப்படையிலான eKYC PM KISAN போர்ட்டலில் கிடைக்கிறது அல்லது அருகிலுள்ள CSC மையங்களை பயோமெட்ரிக் அடிப்படையிலான eKYC க்கு தொடர்பு கொள்ளலாம். அனைத்து விவசாயிகளுக்கும் eKYC க்கான கடைசி தேதியை மத்திய அரசு மீண்டும் நீட்டித்துள்ளது. மேலும் eKYC க்கான புதிய கடைசி தேதி ஜூலை 31, 2022 ஆகும். முன்னதாக, இகேஒய்சி அப்டேட் செய்வதற்கான காலக்கெடுவை மே மாதம் 31ஆம் தேதி வரை வழங்கியிருந்தது. மேலும் PM கிசான் திட்டத்தில் பதிவு செய்வதில் அதிக முறைகேடுகளைத் தடுக்கும் முயற்சியில், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்களைப் பெற விவசாயிகள் தங்கள் ரேஷன் கார்டு எண்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற புதிய உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது.

ஜூலை 17ம் தேதி NEET தேர்வு கட்டாயம் நடைபெறும் – NTA திட்டவட்டம்!

அதாவது விவாசகிகள் PM கிசான் திட்டத்தில் பதிவு செய்யும் போது, ரேஷன் கார்டின் சாஃப்ட் காப்பியை PM Kisan போர்ட்டலில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இதனுடன், திட்டத்தின் இ-கேஒய்சி செய்வதையும் அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. உங்களின் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்ட உடன் மட்டுமே PM Kisan இன் பலன்களைப் விவசாயிகள் பெற முடியும். PM Kisan திட்டத்திற்கு, தங்கள் பெயரில் சாகுபடி நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயிகளும் தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

[table id=1078 /

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!