
லாபத்தை அள்ளித்தரும் பிக்ஸட் டெபாசிட்டின் வட்டி விகிதம்.. சாமானிய மக்களுக்கான சரியான முதலீடு திட்டம்..
மக்கள் தங்கள் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பான மற்றும் எதிர்காலத் தேவைகளுக்காக ஏதேனும் ஒரு திட்டத்தில் முதலீடு செய்ய விரும்பி போஸ்ட் ஆபீஸ் திட்டங்களை தேர்வு செய்கின்றனர். இந்நிலையில் போஸ்ட் ஆபீஸ் பிக்சட் டெபாசிட் (Fixed deposit) திட்டமானது பாதுகாப்பானது மட்டுமின்றி, நல்ல வட்டி விகிதங்களையும் வழங்குகிறது. அந்த வகையில் தற்போது மக்களுக்கு லாபம் தரக்கூடிய இத்திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
அதாவது இந்த திட்டத்தில் 1 வருடம் முதல் 5 வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். மேலும் இந்தத் திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 1,000 முதல் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் வரி விலக்கு சலுகையும் கிடைக்கும். மேலும் முதலீடு செய்யும் ஆண்டுகளுக்கு தகுந்தவாறு வட்டி விகிதங்கள் மாறுபடக்கூடும்.
அந்த வகையில், வாடிக்கையாளர் 1 லட்சத்தை 1 வருடத்திற்கு முதலீடு செய்தால், 6.9% வட்டியுடன் 1 வருடத்திற்குப் பிறகு உங்களுக்கு மொத்த தொகையாக ரூ. 1,07,081 கிடைக்கும். மேலும் 2 ஆண்டுகள் முதலீட்டுக்கு வட்டி 7% விகிதம் ஆகும், எனவே, 2 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 1,14,888 கிடைக்கும். இதுவே 3 வருடங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் 7.1% வட்டி விகிதம் ஆகும், எனவே, 3 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.1,22,022 கிடைக்கும், இதில் வட்டி தொகையாக ரூ. 22,022 சேர்ந்திருக்கும். தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ஒரு லட்ச ரூபாய் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் 7.5% வட்டி விகிதம் கிடைக்கும். எனவே, 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ. 44,995 வட்டி சேர்த்து, மொத்தம் முதிர்வு தொகையாக ரூ. 1,44,995 வாடிக்கையாளர் பெறலாம் என அஞ்சல் சேவை வாரியம் தெரிவித்துள்ளது.























