இந்திய கடற்படையில் புதிய வேலைவாய்ப்பு 2025 – 320+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

0

இந்திய கடற்படையில் புதிய வேலைவாய்ப்பு 2025 – 320+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய கடற்படை ஆனது Syrang of Lascars, Lascar-l, Fireman (Boat Crew), Topass பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 327 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Indian Navy காலிப்பணியிடங்கள்:

Syrang of Lascars, Lascar-l, Fireman (Boat Crew), Topass பணிக்கென காலியாக உள்ள 327 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Syrang of Lascars – 57 பணியிடங்கள்
  • Lascar-l – 192 பணியிடங்கள்
  • Fireman (Boat Crew) – 73 பணியிடங்கள்
  • Topass – 5 பணியிடங்கள்
கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Navy வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

NABARD-ல் புதிய வேலைவாய்ப்பு 2025 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- சம்பளம் || உடனே விரையுங்கள்!

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.

  • Syrang of Lascars: 7th CPC Pay Matrix 4 ரூ. 25,500/- முதல் ரூ. 81,100/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
  • Lascar-l, Fireman (Boat Crew), Topass: 7th CPC Pay Matrix 1 ரூ.18,000/- முதல் ரூ. 56,900/- வரை ஊதியமாக வழங்கப்படும்.
Indian Navy தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Screening, Shortlisting மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 01.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!