TNPSC இந்திய அரசியலமைப்பு – அரசியலமைப்புத் திருத்தம்

0
அரசியலமைப்புத் திருத்தம்

திருத்தம் என்பது: பாராளுமன்ற இறையாண்மை மற்றும் எழுதப்பட்ட அரசியலமைப்பின் வேற்றுமைகளை அகற்றி சமரசப்படுத்துதல் ஆகும். – ஜவஹர்லால் நேரு.

  • அரசியலமைப்பின் சரத்து 368 (பகுதி XX) அரசியலமைப்பையும் அதன் செயல்முறைகளையும் திருத்துவதற்கான அதிகாரத்தை பாராளுமன்றத்திற்கு வழங்குகிறது.
  • பாராளுமன்றமானது அரசியலமைப்பினைத் திருத்தி புதிய பகுதிகளை சேர்ப்பதோ, மாற்றி அமைப்பதோ அல்லது நீக்கவோ முடியும். ஆனால் இதற்காக உருவாக்கப்பட்ட நடைமுறைகளை பின்பற்றியே செய்ய வேண்டும்.
  • எனினும் பாராளுமன்றமானது அரசியலமைப்பின் “அடிப்படைக் கட்டமைப்பை”(Basic structure) மீறி திருத்தம் செய்யக்கூடாது. இவ்விதியானது கேசவானந்த பாரதி வழக்கில் (1973) உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் சேர்க்கப்பட்டது. அயர்லாந்து அரசியலமைப்பில் இருந்து எடுக்கப்பட்டது.

திருத்துவதற்கான செயல்முறைகள்

  • அரசியலமைப்புத் திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் மட்டும் அறிமுகப்படுத்த முடியும். மாநில சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்த முடியாது.
  • இந்த மசோதாவை அமைச்சரோ அல்லது ஏதேனும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரோ அறிமுகப் படுத்தலாம். மேலும் இந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவரின் முன் அனுமதி தேவையில்லை.
  • இந்த மசோதா ஒவ்வொரு அவையிலும் சிறப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அதாவது அவையின் மொத்த உறுப்பினர்களின் குறைந்தபட்சம் 2ஃ3 பங்கு வருகை புரிந்து வாக்களித்தல், அவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் 50மூ மேல் அந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்திருக்க வேண்டும்.
  • கூட்டாட்சி அமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட்டால் நாட்டிலுள்ள மொத்த மாநிலங்களில் பாதிக்கு மேற்பட்ட மாநிலங்கள் ஒப்புதல் அளிக்கவேண்டும். இந்த மாநிலங்களின் சட்டசபையில் சாதாரண அறுதி பெரும்பான்மையினர் ஒப்புதல் அளித்தாலே போதுமானது.
  • அரசியலமைப்புத் திருத்த மசோதாவை நிறைவேற்ற பாராளுமன்ற கூட்டுச் கூட்டத்தை கூட்ட இயலாது (ஷரத்து 108).
  • அரசியலமைப்பு திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் குடியரசுத்தலைவர் கட்டாயம் அம்மசோதாவிற்கு கையொப்பம் இடவேண்டும் (24 அரசியலமைப்பு திருத்தச் சட்டம்)

திருத்தத்தின் வகைகள்

  • சாதாரண அறுதிப்பெரும்பான்மை
  • சிறப்பு அறுதிப்பெரும்பான்மை
  • சிறப்பு அறுதிப்பெரும்பான்மை அதனுடன் பாதிக்கு மேற்பட்ட மாநிலங்கள் ஒப்புதல் வழங்க வேண்டும்.
  1. சாதாரண பெரும்பான்மை
  • அவைக்கு வருகை புரிந்து வாக்களித்தோரில் 50மூ மேல் ஆதரவாக வாக்களிப்பது

இந்த பெரும்பான்மை வாயிலாக திருத்தப்படும் இனங்களாவன:

  • நிர்வாகம் அல்லது புதிய மாநிலங்களை உருவாக்குதல்
  • மாநில எல்லைகளை மாற்றி அமைத்தல்
  • மாநில சட்ட மேலவையை கலைப்பதோ அல்லது உருவாக்குவதோ (ஷரத்து 169)
  • 2-வது அட்டவணையை திருத்துவதற்கு
  • குறைந்தபட்ச உறுப்பினர் வருகையை (ஞரழசரஅ) மாற்றியமைக்க.
  • பாராளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் படிகள்.
  • அலுவலக மொழியின் பயன்பாடு
  • பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் தொகுதிகளை நீக்க.
  • யூனியன் பிரதேசம் (ரு.வு)
  • 5-வது அட்டவணை
  • 6-வது அட்டவணை
  1. சிறப்புப் பெரும்பான்மை:
  • அவையின் மொத்த உறுப்பினர்களின் 2ஃ3 பங்கிற்கு குறையாமல் வருகை புரிந்த மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் (50மூ) ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
  • இந்தப் பெரும்பான்மை வாயிலாக திருத்தப்படும் இனங்களாவன
  • அடிப்படை உரிமைகள்
  • அரசு நெறிமுறைக் கோட்பாடு
  • 1 மற்றும் 3ம் பிரிவுகளில் இடம்பெறாத இனங்கள்

3. சிறப்புப் பெரும்பான்மை மற்றும் மாநில அரசுகளின் ஒப்புதல்

  • அரசியலமைப்பில் கூட்டாட்சி தொடர்பான இனங்கள்
  • குடியரசுத் தலைவர் தேர்தல் மற்றும் அதன் நடைமுறையை மாற்ற
  • மத்திய மற்றும் மாநில நிர்வாகத்துறையின் அதிகாரத்தை நீட்டிக்க
  • உச்ச மற்றும் உயர் நீதிமன்றம்
  • மத்திய மற்றும் மாநில சட்டமன்ற அதிகார பங்கீடு
  • 7-வது அட்டவணை
  • பாராளுமன்றத்தில் மாநிலங்களின் பங்களிப்பு
  • அரசியலமைப்பை ஷரத்து 368I பயன்படுத்தி திருத்துவதற்கான செயல்முறைகள்

சில அடிப்படைக் கட்டமைப்பின் உள்ளடக்கம்

உச்ச நீதிமன்றம், தனது ‘அடிப்படை அம்சங்கள்’ பட்டியலை ரத்து செய்வதற்கு மறுத்துவிட்டது. இது காறும் எடுக்கப்பட்ட வௌ;வேறு முடிவுகளிலிருந்து, பின்வரும் பட்டியல் பெறப்படலாம்:

  • அரசியலமைப்புச் சட்டத்தின் உச்சநிலைத் தன்மை
  • சட்டத்தின் ஆட்சி
  • அதிகாரப் பிரிவினைக் கொள்கை
  • அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் குறிப்பாக வரையறுக்கப்பட்டுள்ள நோக்கங்கள்
  • நீதிப்புனராய்வு; பிரிவுகள் 32 மற்றும் 226
  • கூட்டாட்சித் தத்துவம்
  • மதச்சார்பின்னை
  • இறையாண்மை, ஜனநாயக, குடியரசுக் கட்டமைப்பு
  • தனிநபரின் சுதந்திரம் மற்றும் கௌரவம்
  • நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு
  • ஒவ்வொர் அம்சத்திலும் அன்றி, சம நீதிக் கொள்கையின் ஒட்டுமொத்த சாராம்சத்தின் அடிப்படையிலான சமத்துவக் கொள்கை.
  • பகுதி – மூன்றில் (III) இடம்பெற்றுள்ள பிற அடிப்படை உரிமைகளின் ‘சாராம்சம்’.
  • ஒரு நல அரசைக் கட்டி எழுப்புவதற்கு சமூக மற்றும் பொருளாதார நீதியின் கருத்தியல் – பகுதி நான்கு (VI)
  • அடிப்படை உரிமைகளுக்கும், வழிகாட்டி நெறிகளுக்கும் இடையே ஒரு சமநிலை.
  • அரசாங்கத்தின் நாடாளுமன்ற அமைப்பு
  • சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்கள் கொள்கை.
  • பிரிவு 368-ன் மூலம் அளிக்கப்பட்டுள்ள, (அரசியல் அமைப்புச் சட்டத்)திருத்த அதிகாரங்களின் மேலுள்ள வரையறைகள்
  • நீதித்துறையின் சுதந்திரத் தன்மை
  • நீதியைப் பெறுவதற்கான திறன்மிக்க வாய்ப்பு – வழிவகை
  • பிரிவுக்ள – 32, 136, 141, 142 – ஆகியவற்றின் கீழ் உச்ச நீதிமன்றத்திற்குள்ள அதிகாரங்கள்
  • ஒரு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மத்தியஸ்த தீர்ப்பாயங்களால், அரசின் நீதியியல் அதிகாரத்தைச் செயற்படுத்துவகையில் தீர்ப்புகள் (முடிவுகளை ரத்து செய்யக் கோருகிற சட்டமியற்றல்) சட்டம்.

PDF Download

Download TNPSC அரசியலமைப்பு பாடக்குறிப்புகள்

Download TNPSC பொது தமிழ் பாடக்குறிப்புகள்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Facebook  Examsdaily Tamil – FB ல் சேர – கிளிக் செய்யவும

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!