இந்திய இராணுவம் (TES-55) ஆட்சேர்ப்பு 2025 – 90 பணியிடங்கள்| மாத சம்பளம் ₹1,77,500 வரை | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!

0
?????? ???????? (TES-55) ??????????? 2025 – 90 ???????????| ??? ??????? ?1,77,500 ??? | ????????? ????????????????!
இந்திய இராணுவம் (TES-55) ஆட்சேர்ப்பு 2025 – 90 பணியிடங்கள்| மாத சம்பளம் ₹1,77,500 வரை | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!

இந்திய இராணுவம் (TES-55) ஆட்சேர்ப்பு 2025 – 90 பணியிடங்கள்| மாத சம்பளம் ₹1,77,500 வரை | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்!

இந்திய இராணுவம் (Indian Army) 10+2 தொழில்நுட்ப நுழைவுத் திட்டம் (Technical Entry Scheme – TES 55) 2025ற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 90 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்திய முழுவதும் பணியிடங்கள் வழங்கப்படுகின்றன. ஆன்லைன் விண்ணப்பங்கள் 14.10.2025 (மாலை 3.00 மணி) முதல் 13.11.2025 (மாலை 3.00 மணி) வரை joinindianarmy.nic.in இணையதளத்தில் பெறப்படும். தகுதியான மற்றும் ஆர்வமுள்ள மாணவர்கள் இந்த சிறந்த அரசுப் பணிக்கு உடனே விண்ணப்பிக்கலாம்.

பணியிட விவரம் 

பதவியின் பெயர் பணியிடங்கள்
10+2 தொழில்நுட்ப நுழைவுத் திட்டம் – 55 90

கல்வித்தகுதி 

அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பொறியியல் பாடப்பிரிவில் பௌதிகவியல், வேதியியல் மற்றும் கணிதத்தில் குறைந்தது 60% மதிப்பெண்களுடன் 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், விண்ணப்பதாரர்கள் JEE (Mains) 2025 தேர்வில் கலந்து கொண்டிருக்க வேண்டும் (இது கட்டாயம்).

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 16½ வயதுக்கு குறையாமல், 19½ வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும்.

BEL ஆட்சேர்ப்பு 2025 – 162 டெக்னீஷியன், இன்ஜினியரிங் அசிஸ்டன்ட் பணியிடங்கள் | ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்

சம்பள விவரம் 

இந்திய இராணுவத்தில் தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 10 – ₹56,100 முதல் ₹1,77,500 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

இந்திய இராணுவ TES 55 ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பக் கட்டணம் எதுவும் இல்லை. அனைத்து விண்ணப்பதாரர்களும் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.

தேர்வு நடைமுறை 

  • Short Listing (தேர்வு பட்டியல்)

  • SSB Interview (சேவை தேர்வு வாரியம் நேர்முகத் தேர்வு)

விண்ணப்பிக்கும் முறை 

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.joinindianarmy.nic.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 14.10.2025 (மாலை 3.00 மணி)
கடைசி தேதி: 13.11.2025 (மாலை 3.00 மணி)

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!