Tokyo Olympics: இந்திய வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி அசத்தல் – காலிறுதிக்கு தகுதி!
டோக்கியோ ஒலிம்பிக்கின் தனிநபர் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி, ரஷ்யா வீராங்கனையுடன் போட்டியிட்டு வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்:
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32 வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 22ம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் இந்தியா உட்பட 205 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 127 வீரர்கள் 18 போட்டிகளில் பங்கேற்கின்றனர். ஜூலை 24ம் தேதி நடைபெற்ற வில்வித்தை சுற்றில் மகளிர் பிரிவில், தீபிகா குமாரி 9வது இடத்தை பிடித்தார். அதன் பிறகு பூடான் வீரரை எதிர்த்து வெற்றி பெற்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
CBSE 12th Result 2021 Date, Time – இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியீடு – ரோல் எண் விளக்கம்!
மேலும் அமெரிக்க வீராங்கனையுடன் போட்டியிட்ட அவர் முதல் சுற்றில் புள்ளிகளை இழந்தார். ஆனாலும் தொடர்ந்து முயற்சி செய்து ஆட்டத்தை விறுவிறுப்பாக மாற்றினார். இறுதி சுற்றில் 4-4 என்ற என்ற கணக்கில் வெற்றி பெற்றார். ஒரு கட்டத்தில் 2-0 என்ற கணக்கில் பின்தங்கியிருந்த தீபிகா குமாரி தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளில் முன்னேறினார். இதனால் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி உலக தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.
TN Job “FB
Group” Join Now
அடுத்ததாக டோக்கியோ ஒலிம்பிக்கின் இன்றைய தனிநபர் வில்வித்தை போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி ரஷ்ய வீராங்கனையை எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை பெரோவை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்று தீபிகா குமாரி டோக்கியோ ஒலிம்பிக்கின் வில்வித்தை போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.