இந்திய தபால் துறையில் GDS வேலை – 38,926 காலிப்பணியிடங்கள் || 10வது தேர்ச்சி போதும்..!

0
இந்திய தபால் துறையில் GDS வேலை - 38,926 காலிப்பணியிடங்கள் || 10வது தேர்ச்சி போதும்..!
இந்திய தபால் துறையில் GDS வேலை - 38,926 காலிப்பணியிடங்கள் || 10வது தேர்ச்சி போதும்..!
இந்திய தபால் துறையில் GDS வேலை – 38,926 காலிப்பணியிடங்கள் || 10வது தேர்ச்சி போதும்..!

இந்திய தபால் துறையானது (India Post) தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Gramin Dak Sevaks (GDS) as BPM / ABPM/ Dak Sevak பதவிக்கு என மொத்தமாக 38,926 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் India Post
பணியின் பெயர் Gramin Dak Sevaks (GDS) as BPM / ABPM/ Dak Sevak
பணியிடங்கள் 38,926
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.06.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

India Post காலிப்பணியிடங்கள்:

மத்திய அரசின் இந்திய தபால் துறை தற்போது வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், Gramin Dak Sevaks (GDS) as BPM / ABPM/ Dak Sevak பணிக்கு மொத்தமாக 38,926 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் 4310 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

India Post கல்வித் தகுதி:

Gramin Dak Sevaks (GDS) பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Mathematics மற்றும் English பாடப்பிரிவில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

India Post வயது வரம்பு:

Gramin Dak Sevaks (GDS) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்ச வயதாக 18 வயது என்றும், அதிகபட்ச வயதாக 40 வயது என்றும் வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு அளிக்கப்பட்டுள்ள வயது தளர்வுகள் பற்றி அறிவிப்பில் காணலாம்.

India Post ஊதிய தொகை:

BPM பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பின் பணியமர்த்தப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.12,000/- ஊதியமாக அளிக்கப்படும் என்றும், ABPM / Dak Sevak பணிக்கு தேர்வு செய்யப்பட்ட பின் பணியமர்த்தப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.10,000/- ஊதியமாக அளிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

India Post தேர்வு முறை:

Gramin Dak Sevaks (GDS) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள், அதன் பின் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என்றும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

India Post விண்ணப்பிக்க கட்டணம்:

SC / ST / PwD / Trans Women மற்றும் பெண்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது என்றும், இவர்களை தவிர மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கு ரூ.100/- மட்டும் விண்ணப்பிக்க கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download
India Post விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசின் இந்திய தபால் துறை பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பை பயன்படுத்தி ஆன்லைனில் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 05.06.2022 ம் தேதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

India Post Notification PDF

 India Post Online Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here