கிரிக்கெட் உலகக்கோப்பை 2023| இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்!
கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்தியா – பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது.
இந்தியா பாகிஸ்தான் போட்டி:
2023 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் நடக்க உள்ளது. வரும் அக்டோபர் ஐந்தாம் தேதி ஆகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் தொடக்க போட்டிகள் நடக்க உள்ளன. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியும் நியூசிலாந்து அணியும் மோதுகின்றன. இதனைத் தொடர்ந்து மற்ற போட்டிகளும் நடக்க உள்ளது. முக்கிய ஆட்டங்களுக்கான போட்டிகளின் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்தியா – ஆஸ்திரேலியா, இந்தியா – ஆப்கானிஸ்தான், இந்தியா – வங்காளதேசம் போன்ற ஆட்டங்களின் டிக்கெட்டுகள் அனைத்தும் தொடங்கிய சில மணி நேரத்திலேயே விற்றுத் தீர்ந்துள்ளது. இந்நிலையில் அக்டோபர் 14ம் தேதி அன்று நடக்க உள்ள இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட்டுகள் செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று விற்பனை செய்யப்படவுள்ளது.
வெகு நாட்களுக்கு பின் சரிந்த சிலிண்டர் விலை – மகிழ்ச்சியில் இல்லத்தரசிகள்.. இன்றைய நிலவரம் இதோ!
போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் புக் மை ஷோ இணையதள மூலம் ஆன்லைனில் நேரடியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆசிய உலக உலககோப்பைக்கான போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணியின் போட்டிகள் மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில் உலககோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் மோதும் போட்டிக்கான எதிர்பார்ப்புகள் எகிற தொடங்கியுள்ளது.