Junior Women’s Asia Cup 2024: சீனாவை வீழ்த்திய இந்தியா.. தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி..

0
Junior Women's Asia Cup 2024: சீனாவை வீழ்த்திய இந்தியா.. தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி..
Junior Women's Asia Cup 2024: சீனாவை வீழ்த்திய இந்தியா.. தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி..

Junior Women’s Asia Cup 2024: சீனாவை வீழ்த்திய இந்தியா.. தொடர்ந்து இரண்டாவது முறை வெற்றி..


இந்திய அரசு இளம் திறமைகளை வளர்ப்பதற்கும், பெண்களை விளையாட்டில் ஊக்குவிப்பதற்கும் அதிக முக்கியத்துவம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான 9வது “மகளிர் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி 2024” ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. இதில் நேற்று (15-12-2024) மாலை நடந்த இறுதிப் போட்டியில் இந்திய அணி, சீனாவை எதிர்கொண்டது.


மேலும், தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் “பெனால்டி ஷூட் அவுட்டில்” இந்திய அணி சார்பில் “சாக்ஷி ராணா, இஷிகா, சுனெலிதா” ஆகியோர் கோல் அடித்து 4-2 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. மேலும், கடந்தாண்டு நடந்த பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பையில் தென் கொரியாவுக்கு எதிராக விளையாடி
வென்றதை தொடர்ந்து  இரண்டாவது முறையாக இந்தியா இப்பட்டத்தை தக்க வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!