சென்னையில் மென்பொருள் நிறுவனங்களில் வருமான வரி சோதனை

0

மென்பொருள் நிறுவனங்களில் வருமான வரி சோதனை – சென்னையில் பரபரப்பு!

சென்னை பெருங்குடி, கந்தன் சாவடி மற்றும் OMR பகுதிகளில் செயல்பட்டு வரும் சில தனியார் நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

குறிப்பாக, கந்தன் சாவடியில் உள்ள CPRE South Asia நிறுவனத்திலும், பெருங்குடி Global Infocity Park-ல் செயல்பட்டு வரும் சில மென்பொருள் நிறுவனங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதற்காக சோதனை?

சில நிறுவனங்கள் தங்களது வருமானத்தை குறைத்து கணக்கு காட்டியதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிறுவனங்களின் வரவு-செலவு கணக்குகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன.

மேலும், OMR பகுதியில் செயல்பட்டு வரும் Tag India நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து நடைபெறும் ஆய்வு

சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பதிவுகளை ஆய்வு செய்த பின்னரே வரி ஏய்ப்பு தொடர்பான முழுமையான விவரங்கள் தெரியவரும் என வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் சென்னை IT நிறுவனங்கள் மத்தியில் இந்த வருமான வரி சோதனை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!