“9 பேருக்கு வாழும் கைவினை பொக்கிஷம் விருது”…!! ரூ. 1 லட்சம் காசோலையுடன் சான்றிதழ்கள் வழங்கி தமிழக முதல்வர் கவுரவம்…!!

0
"9 ???????? ?????? ?????? ????????? ??????"...!! ??. 1 ?????? ??????????? ???????????? ?????? ????? ???????? ???????...!!
"9 பேருக்கு வாழும் கைவினை பொக்கிஷம் விருது"...!! ரூ. 1 லட்சம் காசோலையுடன் சான்றிதழ்கள் வழங்கி தமிழக முதல்வர் கவுரவம்...!!

“9 பேருக்கு வாழும் கைவினை பொக்கிஷம் விருது”…!! ரூ. 1 லட்சம் காசோலையுடன் சான்றிதழ்கள் வழங்கி தமிழக முதல்வர் கவுரவம்…!!

 

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றிய கைவினைஞர்களுக்கு  ‘பூம்புகார்’ மற்றும் ‘வாழும் கைவினை பொக்கிஷம்’ ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025 ஆம் ஆண்டிற்கான கைத்தறி துறையில் சிறந்த பங்களிப்பு மற்றும் படைப்புகளை வழங்கிய கைவினைஞர்களுக்கு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று (18.02.2025) நடைபெற்ற விழாவில் விருதுகளை வழங்கினார். மேலும், “65 வயதிற்கு மேற்பட்ட 9 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினை பொக்கிஷம் என்னும் உயரிய விருதினை ” வழங்கினார்.

 

Upcoming Govt Exams 2025 in Tamil – Check TNPSC, UPSC, SSC, RRB, Banking and Other Job Alerts 

அதேபோல், “பூம்புகார் மாநில விருது 10 சிறந்த கைவினைஞர்களுக்கு அளித்து” சிறப்பு செய்தார். மேலும், அந்த வாழும் கைவினை பொக்கிஷம் விருது பெற்றவர்களுக்கு ரூ. 1 லட்சத்திற்கான காசோலை, ஒரு தாமிரப் பத்திரம் , 8 கிராம் தங்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அதேபோல், பூம்புகார் மாநில விருது பெற்றவர்களுக்கு ரூ. 50,000 காசோலை, ஒரு தாமிர பாத்திரம், 4 கிராம் தங்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!