
இந்தியாவின் இறக்குமதி பொருட்களுக்கு 26% வரி விதிப்பு…!! அமெரிக்க அதிபர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிற நாடுகள் விதிக்கும் வரிகளுக்கு ஏற்ப, அமெரிக்கா வரிகளை மாற்றியமைக்க போவதாக சமீபத்தில் அறிவித்தார். மேலும், இந்த பரஸ்பர வரி விதிப்பு முறை அமலுக்கு வரும் நாளை, அமெரிக்கா “புதிய விடுதலை நாள்” என்றும் கொண்டாடப் போவதாகவும் தெரிவித்தார். அந்தவகையில், நேற்று (இந்திய நேரப்படி இரவு) முதல் இந்த பரஸ்பர வரி விதிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார்.
பொதுமக்கள் கவனத்திற்கு.. தமிழகத்தில் நாளைய (04-03-2025) மின்தடை பகுதிகள்.. வெளியான லிஸ்ட் இதோ..!!
அதன்படி, இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 26% வரி விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், சீனாவிற்கு 34% மும், வியட்நாம் 46% மும், தைவான் 32% மும், இலங்கைக்கு 44% மும், இந்தோனேசியாவிற்கு 32% மும் மற்றும் ஜப்பான் 24% மும் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். மேலும், இந்த பரஸ்பர வரி விதிப்பால், இனி சர்வதேச அளவில் வர்த்தகப் போர் ஏற்படும் அபாயம் உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

























