முக்கிய திட்டங்கள் – டிசம்பர் 2018

0

முக்கிய திட்டங்கள் – டிசம்பர் 2018

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 2018

இங்கு டிசம்பர் மாதத்தின் முக்கிய திட்டங்கள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அணைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் முக்கியமான விவரங்கள் ஆகும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

டிசம்பர் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

வடகிழக்கில் வாழ்வாதாரத் திட்டங்கள்

  • தேசிய பெண்கள் ஆணையம் (NCW), திறன் வளர்ச்சி மற்றும் சிறப்பு பயிற்சியின் மூலம் பெண்களுக்கு குறிப்பாக இளம் வயதினருக்கு, வடகிழக்கு வாழ்வாதார உதவித் திட்டங்களை ஆதரிக்கிறது. இது அவர்களது வாழ்கை வாழ சம்பாதிக்கவும் தனிநபர்களாக வாழவும் உதவுகிறது.

ஸ்வதேஷ் தர்ஷன் திட்டம்

  • “பழங்குடி சர்க்யூட் வளர்ச்சி: பெரென்-கோஹிமா-வோக்கா திட்டம்” நாகலாந்தில் உள்ள கிசாமா ஹெரிடேஜ் கிராமத்தில், ஸ்ரீ நேபியோ ரியோ நாகாலாந்தின் முதல் அமைச்சரால் தொடங்கி வைக்க உள்ளார்.
  • இது, இந்திய அரசின் சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் செயல்படுத்தப்படும் முதல் திட்டமாகும்.

குழந்தைகள் விடுதிகளுக்கு வழிகாட்டுதல்

  • குழந்தைகள் மற்றும் சிறுவர் வளர்ச்சி அமைச்சகம் சிறுவர் விடுதிகளுக்கான வழிகாட்டுதல்களை உருவாக்குகிறது, குழந்தைகளுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச தர நிர்ணயங்களைக் குறிப்பிடுகின்றன.

2018-19 ற்கான மொத்த நேரடி வரி வசூல்

  • இந்த ஆண்டு நவம்பர் வரை 2018-19 ஆம் ஆண்டிற்கான நேரடி வரி வசூலின், மொத்த சேகரிப்புகள்75 லட்சம் கோடி ரூபாய். இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் மொத்த சேகரிப்புகளை விட 15.7 சதவிகிதம் அதிகமாகும்.

நிறைவு சான்றிதழை கொண்ட வளாகங்கள் மற்றும் குடியிருப்புவிற்பனைக்கு ஜிஎஸ்டி இல்லை

  • பூர்த்தி செய்யப்பட்ட நிறைவு சான்றிதழை கொண்ட வளாகங்கள் மற்றும் குடியிருப்பு விற்பனைக்கு ஜிஎஸ்டி இல்லை என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியது.

ஸ்டார்ட் அப்களுக்கான பட்டியலிடும் நெறிமுறைகளை செபி தளர்த்தமுடிவு, புதுவையாளர்களின் வளர்ச்சி பிளார்ட்பார்மை மறுபெயரிடமுடிவு

  • ஜூன் மாதத்தில் ஸ்டார்ட் அப்களை மதிப்பாய்வு செய்ய இந்தியாவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.

தேசிய ஓய்வூதியத் திட்டம்

  • தேசிய ஓய்வூதிய திட்டத்தில்(NPS) சில மாற்றங்களை செய்ய மத்திய அமைச்சரவை முடிவு. மத்திய அரசின் NPS பங்களிப்பு 10 சதவீதத்திலிருந்து 14 சதவீதமாக உயர்த்தப்படும். இப்போது முழு ஓய்வூதியத் தொகையை எடுக்கும் போது வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.

FAME- இந்தியா திட்டம்

  • மின்சார மற்றும் கலப்பின வாகன தொழில்நுட்பத்தை உற்பத்தி செய்வதற்கு மற்றும் அதற்கேற்ற நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, கனரக தொழில்துறை துறை FAME-India திட்டம்- Phase-I [இந்தியாவில் ஹைப்ரிட் & மின்சார வாகனங்கள் வேகமாக ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் உற்பத்தி] 1 ஏப்ரல் இந்த திட்டம் 2019 மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடி மேலாண்மை திட்டம்

  • இணைய தாக்குதல்கள் மற்றும் இணைய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஒரு நெருக்கடி மேலாண்மை திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
  • மத்திய மற்றும் மாநில அரசுகளால் அனைத்து துறைகளிலும் முக்கிய துறைகளில் செயல்படுத்தப்படும்.

பிரதிபா பர்வா

  • மத்தியபிரதேசத்தில், பிரதிபா பர்வா எனும் மூன்று நாள் திட்டம் மூலம் பள்ளிக்குழந்தைகளின் திறமையை வளர்ப்பதற்காக அனைத்து முதன்மை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • பள்ளி கல்வித்துறையின் பிரதான திட்டமான “பிரதிபா பர்வா” அடிப்படை கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக ஆகும்.

மகிலா கிசான் விருதுகள் திட்டம்

  • மகிலா கிசான் விருதுகள் திட்டம், பெண் விவசாயிகள் எதிர்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் வெற்றிகளை நாட்டிற்கு முன்னால் கொண்டுவரும் முயற்சியாகும்.
  • பிரசார் பாரதி தலைவர் டாக்டர் ஏ. சூர்யா பிரகாஷ் தூர்தர்ஷன் மகிலா கிசான் விருதுகளை புது டில்லியில் டிடி கிசான் சேனலில் தொடங்கி வைத்தார்.
  • இந்திய விவசாய ஆராய்ச்சி கழகத்தால், ஐ.சி.ஏ.ஆர். பெண் விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

டோல் பிளாஸாவில் நெடுஞ்சாலை கூடுகள்

  • தேசிய நெடுஞ்சாலை ஆணையம், NHAI, பயணிகள் ஒரு பாதுகாப்பான மற்றும் வசதியான பயணம் மேற்கொள்வதற்காக டோல் பிளாஸாவில் நெடுஞ்சாலை கூடுகள் அமைக்கத்திட்டம்.

‘வத்தன் கோ ஜனோ‘ திட்டம்

  • நாட்டின் மற்ற பகுதிகளில் நடைபெறும் கலாச்சார மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சியைப் பற்றி ஜம்மு மற்றும் காஷ்மீரின் இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுக்கு வெளிப்படையாக வழங்குவதற்காக “வத்தன் கோ ஜானோ” திட்டத்தை உள்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.

“தேசிய மட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் கண்காணிப்பு” (MPRNL) திட்டம்

  • வேளாண் மற்றும் விவசாய நலத்துறை அமைச்சகம் “தேசிய அளவிலான பூச்சிக்கொல்லி மருந்துகளை கண்காணித்தல்” (MPRNL) திட்டத்தை அமல்படுத்துகிறது. இதன் கீழ், உணவுப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு பூச்சிக்கொல்லி எச்சங்களின் இருக்கிறதா என பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.

“ரயில்வேயில் புதுமை மற்றும் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவை வலுப்படுத்துதல்”

  • ரயில்வே அமைச்சகம், “இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ஸ் (இந்தியா)வுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இரயில்வேயில் புதுமை மற்றும் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவை வலுப்படுத்துதல்” எனும் நிகழ்வ ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா திறந்துவைத்தார்.

புதிய இந்தியக்கான மூலோபாய ஆவணம்

  • நிதி ஆயோக் புதிய இந்தியாவுக்கான விரிவான தேசிய மூலோபாயத்தை அறிமுகப்படுத்தியது. இது 2022-23-ன் தெளிவான நோக்கங்களை வரையறுக்கிறது.

விவசாயிகளின் நலனுக்காக 3 திட்டங்கள்

  • விவசாயிகளின் நலனுக்காக அசாம் அரசு மூன்று திட்டங்களை அறிவித்துள்ளது. அசாம் விவசாயிகளின் கடன் உபகாரம் திட்டம் (AFCSS), அசாம் விவசாயிகளின் வட்டி நிவாரணத் திட்டம் (AFIRS) மற்றும் அஸ்ஸாம் விவசாயிகள் ஊக்கத் திட்டம் (AFIS) ஆகியவையாகும்.

சிஎன்ஜி[CNG] வரிசை மேலாண்மை அமைப்பு (QMS)

  • பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, திறன் வளர்ச்சி மற்றும் தொழில்முனைவோர் அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்திரபிரஸ்தா எரிவாயு நிறுவனத்தின் (IGL) பல்வேறு டிஜிட்டல் வாடிக்கையாளர் முன்முயற்சிகளை தொடங்கிவைத்தார். இவை சிஎன்ஜி[CNG] வரிசை மேலாண்மை அமைப்பு (QMS) மற்றும் சமூக CRM ஆகியவை அடங்கும். சி.என்.ஜி-ல் இயக்கப்படும் பஸ்கள் விரைவில் பசுமைத் தாழ்வாரங்களில்[green corridors] தொடங்கப்படும்.

ஊட்டச்சத்து மறுவாழ்வு மையங்கள்

  • கடுமையான ஊட்டச்சத்துக் குறைவு (SAM) மற்றும் மருத்துவ சிக்கல்களுடன் உள்ள குழந்தைகளுக்கு வசதி சார்ந்த பராமரிப்பு வழங்க நாடு முழுவதும் 1151 NRC க்கள் தேசிய சுகாதார மிஷன் (NHM) கீழ் நிறுவப்பட்டுள்ளன.

கலா ​​உத்சவ்

  • ஒவ்வொரு ஆண்டும், மத்திய அரசின் சார்பில், கலா உத்சவ் என்ற கலாச்சார போட்டி, மாணவர்களுக்கு நடத்தப்படும். இசை, நடனம், ஓவியம், நாடகம், காண்கலை என, பல தலைப்புகளில், மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படுகின்றன.  பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கவும், அங்கீகாரம் அளிக்கவும், மத்திய அரசு, ‘கலா உத்சவ்’ என்ற கலை திருவிழா போட்டிகளை, ஆண்டு தோறும் நடத்துகிறது.

நகர்ப்புற பகுதிகளுக்கு இணையாக கிராமப்புற இந்தியாவுக்குமேம்பட்ட மருத்துவ சேவைகளை விரிவாக்குவதற்கு ஜனாதிபதிவலியுறுத்தல்

  • கிராமப்புற தெலுங்கானாவில் அரிவாள்செல் சோகை (சிக்கில் செல்), இரத்த அழிவுச் சோகை (தலசீமியா) மற்றும் பிற மரபணு இரத்தக் கோளாறுகள் ஆகியவற்றின் சிறந்த மைய அரங்கத்தின் திறப்பு விழாவில் நகர்ப்புற பகுதிகளுக்கு இணையாக கிராமப்புற இந்தியாவிற்கான மேம்பட்ட மருத்துவ சேவைகளை விரிவுபடுத்த வேண்டிய அவசியத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வலியுறுத்தினார்.

அடல் ஆயுஷ்மன் உத்தரகண்ட் யோஜனா

  • ‘அடல் ஆயுஷ்மன் உத்தரகண்ட் யோஜனா’ உத்தரகண்ட் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் மாநிலத்தில் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஆண்டுதோறும் 5 லட்ச ரூபாய் வரை மருத்துவ சிகிச்சை பெற முடியும்.

மத்திய அரசு இமாச்சல பிரதேசத்தின் வருடாந்திர பட்ஜெட்டை அதிகரித்துள்ளது

  • பிரதமர் நரேந்திர மோடி, இமாச்சல பிரதேசத்தின் வருடாந்திர வரவு செலவு திட்டத்தை ரூ .72 ஆயிரம் கோடியாக உயர்த்தியுள்ளார்.

யமுனா புத்துயிர் பெறுவதற்கான 11 திட்டங்களுக்கு அடிக்கல்நாட்டப்பட்டது

  • புதுடில்லியில் நமாமி கங்கா திட்டத்தின் கீழ் யமுனா புத்துயிர் பெறுவதற்கான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.

கலா ​​உத்சவ்

  • பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கவும், அங்கீகாரம் அளிக்கவும், மனித வளத்துறை அமைச்சகம், ‘கலா உத்சவ்’ என்ற கலை திருவிழா போட்டிகளை, ஆண்டு தோறும் நடத்துகிறது.

ஒரே பாரதம் – உன்னத பாரதம் [ஏக் பாரத் ஸ்ரேஸ்த்த பாரத்]

  • ஒரே பாரதம் – உன்னத பாரதம் [ஏக் பாரத் ஸ்ரேஸ்த்த பாரத்]திட்டத்தின் கீழ் தேசிய ஒருங்கிணைப்பை ஊக்குவிப்பதற்காக மனித வளத்துறை அமைச்சகம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

தேனீ திட்டம்

  • இரயில் பாதையில் யானைகளை வராமல் தடுக்கும் அசாமின் தேனீ திட்டம், நாட்டின் மற்ற பகுதிகளில் விரிவாக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்தார்.
  • யானைகளை இரயில் பாதையில் இருந்து விலக்கி வைக்க தேனீக்களின் பதிவுசெய்யப்பட்ட ஒலியை பயன்படுத்தும் இது ஒரு எளிய சாதனம் ஆகும்.
PDF Download

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018

நடப்பு நிகழ்வுகள்  WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!