ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – வீட்டில் இருந்தபடியே பொருட்களை வாங்கலாம்!
பலரும் ரேஷன் கடைகளுக்கு செல்ல நேரம் இல்லாத காரணத்தினாலேயே ரேஷன் பொருட்களை முறையாக வாங்குவதில்லை. இதனால், வீட்டில் இருந்தபடியே Mera Ration என்கிற ஆப் மூலமாகவே ரேஷன் பொருட்களை வாங்கும் திட்டம் அறிமுகமாகியுள்ளது.
ரேஷன் பொருட்கள்:
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் மூலமாக பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் முதலான பொருட்களை மலிவு விலையில் வாங்கி பயன் பெற்று வருகின்றனர். ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் பெற ரேஷன் கார்டு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. PHH, PHH – AYY, NPHH, NPHH – NC என பல ரேஷன் கார்டு அமைப்புடைய ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து மக்களும் ரேஷன் பொருட்களை வாங்கி பயன்பெற வேண்டும் என்கிற நோக்கத்துடன் கைரேகை பதிவின் மூலமாக ரேஷன் பொருட்களை வாங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
ExamsDaily Mobile App Download
மேலும், இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்கள் பயன் பெரும் வகையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்கிற திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி எந்த மாநிலத்தில் இருந்தாலும் ரேஷன் பொருட்களை பெற்று கொள்ளலாம். இதுமட்டுமல்லாமல், ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதல் வசதிகள் அவ்வப்போது வழங்கப்படுகிறது. Mera Ration ஆப் மூலமாகவும் தற்போது எளிமையான முறையில் வீட்டில் இருந்தபடியே ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ளும்படியான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – இந்த அப்டேட்டுகளை தெரிந்து கொள்வது நல்லது!
அதாவது, இந்த திட்டத்தின் மூலமாக தான் இருக்கும் இடங்களுக்கு அருகிலுள்ள ரேஷன் கடைகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும். இதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ரேஷன் பொருட்களுக்கும் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதையும் இந்த ஆப்பின் மூலமாகவே கண்டுபிடிக்கலாம். கடைசியாக ரேஷன் கடைகளில் வாங்கிய அனைத்து ரேஷன் பொருட்களின் விவரங்களையும் அறிந்துகொள்ளலாம். தற்போது எவ்வாறு இந்த App ஐ பயன்படுத்துவது என்பதை பார்க்கலாம். முதலில், Google Play Store க்கு சென்று Mera Ration App என்கிற ஆப்பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பின்பு, அந்த appல் ரேஷன் கார்டு விவரங்களை சேர்த்து பயன்படுத்தி கொள்ளலாம்.