ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – இந்த அப்டேட்டுகளை தெரிந்து கொள்வது நல்லது!

0
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - இந்த அப்டேட்டுகளை தெரிந்து கொள்வது நல்லது!
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு - இந்த அப்டேட்டுகளை தெரிந்து கொள்வது நல்லது!
ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு – இந்த அப்டேட்டுகளை தெரிந்து கொள்வது நல்லது!

பொதுவாக ரேஷன் கார்டு என்பது பொருட்களை வாங்க மட்டும் அல்லாது, இன்றைய காலக்கட்டங்களில் சிலிண்டர் வாங்கவும், அடையாள ஆவணமாகவும் உள்ளது. தமிழகத்தில் மாநில அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் பெற ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் ரேஷன் அட்டையை அப்டேட் உடன் வைத்திருப்பது அவசியம் ஆகும்.

முக்கிய அப்டேட்கள்:

ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை போன்று ரேஷன் கார்டும் மிக மிக முக்கியமான ஆவணமாகும். அதிலும் குறிப்பாக அரசு தரும் அனைத்து சலுகைகளையும் பெற வேண்டும் என்றால் அதற்கு ரேஷன் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும். ரேஷன் கார்டு இல்லாமல் மாதாந்திரம் உணவுப் பொருட்களை வாங்குவது இயலாத ஒன்று. தமிழ்நாட்டில் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் பெயர் வேறு எந்த ரேஷன் கார்டிலும் இருக்க கூடாது.குடும்பத்தின் வருவாயை பொறுத்து ரேஷன் கார்டு 5 வகைகளில் உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ரேஷன் அட்டையை கவனக்குறைவால் தொலைத்து விட்டால், அடுத்து என்ன செய்து என்று நாம் குழப்பத்தில் இருப்போம். ஆனால் இந்த குழப்பங்களை போக்கும் விதமாக தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் புதிய ரேஷன் அட்டை நகலை ஆன்லைனில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும்.

ExamsDaily Mobile App Download

1. முதலில் https://www.tnpds.gov.in/ என்ற தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.

2. லிங்க் ஓபன் ஆனதும் உங்கள் பயனாளர் IDஐ உள்ளிட வேண்டும்.

3. பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு OTP வரும்

4. அதை ஸ்கிரீனில் பதிவு செய்து சுயவிவர பக்கத்திற்கு உள்நுழைய வேண்டும்.

5. இப்போது TNPDS ஸ்மார்ட் கார்டு பதிவிறக்கம் மற்றும் அச்சிடுவதற்கான பக்கத்தை காண்பீர்கள்.

6. இதில் கேட்கப்படும் விவரங்களை படிவு செய்து, அந்த காப்பியை PDF ஆக சேமிக்க வேண்டும் அல்லது டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.

7. இந்த காப்பியை பிரிண்ட் போட்டு, உங்கள் ரேஷன் அட்டைக்கு உட்பட்ட பகுதிக்கு இருக்கும் உணவு வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று இந்த நகலை சமர்ப்பித்தால், மீண்டும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். இதற்கு சில நாட்கள் எடுத்துக் கொள்ளலாம்.

இதை தொடர்ந்து புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் ஈஸியாக விண்ணப்பிக்கலாம். அதற்கு தேவையான ஆவணங்கள், ஆதார், இருப்பிட சான்று, புகைப்படம், திருமண சான்றிதழ் ஆகியவை ஆகும்.

CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – எழுத்துத் தேர்வுகளுக்கு முன்னதாக Webinar பயிற்சி!

1. https://www.tnpds.gov.in/ இந்த லிங்குக்குள் செல்ல வேண்டும்.

2. திரையில் இருக்கும் மின்னணு அட்டை சேவைகள் பிரிவில் உள்ள ‘புதிய மின்னணு அட்டை விண்ணப்பிக்க’ பிரிவை தேர்வு செய்ய வேண்டும்.

3. அப்போது இருப்பிடம் மற்றும் தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படும். அதை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கான ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.

4. பின்னர் குடும்பத் தலைவரின் படத்தை பதிவேற்றி, Submit பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.

5. இந்த படிகள் முடிந்த பிறகு ஒரு Reference Number வழங்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!