முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 06

0

சரத் சந்திர போசு பிறந்த தினம் 

பிறப்பு:

  • சரத் சந்திர போசு (Sarat Chandra Bose செப்டம்பர் 6, 1889-பிப்பிரவரி 20, 1950 ) என்பவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரராகவும் வழக்கறிஞராகவும் விளங்கியவர். இவர் புகழ் பெற்ற சுதந்திரப் போராட்டத் தலைவர் சுபாசு சந்திர போசின் அண்ணன் என்பது குறிப்பிடத் தக்கது.

பணிகள்:

  • 1936 ஆம் ஆண்டில் வங்கப் பிரதேச காங்கிரசு குழுவின் தலைவர் ஆனார்.
  • 1936 முதல் 1947 வரை அனைத்திந்திய காங்கிரசு குழுவில் உறுப்பினராக இருந்தார்.
  • 1946 முதல் 1947 வரை நடுவண் சட்ட சவைக்கு காங்கிரசு தூதுக் குழுவை வழி நடத்திச் சென்றார்.
  • வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஈடுபட்டுப் போராடினாலும், அதே நேரத்தில் தம் இளவல் சுபாசு சந்திர போசுவின் இந்தியத் தேசியப் படையின் செயல்பாட்டையும் ஆதரித்தார்.
  • 1945 இல் சுபாசு சந்திர போசு காலமான பிறகு இந்தியத் தேசியப் படையைச் சேர்ந்த வீரர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் நிவாரண உதவிகளைச் செய்தார்.
  • பிற்காலத்தில் கொள்கை வேறுபாட்டால் காங்கிரசிலிருந்து விலகினார்.
  • இந்தியா விடுதலை அடைந்ததும் தம் தம்பி சுபாசு சந்திர போசு நடத்தி வந்த பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து வழி நடத்திச் சென்றார்.
  • சோலிசக் குடியரசுக் கட்சி என்னும் பெயரில் ஒரு அமைப்பைத் தொடங்கினார். இந்தியாவிலும் வங்கத்திலும் சோசலிச அமைப்பு ஆட்சி மலர்வதை விரும்பினார்.
  • சரத் சந்திர போசு சப்பானிய அரசுடன் தொடர்பு வைத்திருந்து பிரிட்டிசு அரசுக்கு எதிராகத் துரோகம் செய்ததாகக் குற்றம் சாற்றப்பட்டு 1941 ஆம் ஆண்டில் திசம்பர் 12 இல் கைதானார். 1945 ஆம் ஆண்டு வரை சிறையில் அடைக்கப் பட்டார்.

எழுதிய நூல்கள்:

  • சரத் சந்திர போசுவை நினைத்துப் போற்றும் வகையில் 2014 ஆம் ஆண்டில் அவர் பெயரில் ஒரு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
  • அதில் லியனாத் கார்டன் என்னும் வரலாற்று ஆசிரியர் அவரை பற்றிப் பேசினார்.
  • லியானத் கார்டன் என்பவர் சரத் சந்திர போசு, சுபாசு சந்திர போசு ஆகிய இரு சகோதரர்களின் வாழ்க்கை வரலாற்று நூலை எழுதியவர் ஆவார்.
  • நீரத் சந்திர சவுத்ரி என்னும் புகழ் பெற்ற அறிஞர் சரத் சந்திர போசுவிடம் 1937 முதல் 1941 வரை செயலராகப் பணி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!