முக்கியமான நிகழ்வுகள் செப்டம்பர் – 10

0

பிறப்பு:

 • 1857 – ஜேம்சு எட்வார்டு கீலர், அமெரிக்க வானியலாளர் (இ. 1900)
 • 1862 – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், தமிழறிஞர், உரையாசிரியர், கவிஞர் (இ. 1914)
 • 1887 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1961)
 • 1892 – ஆர்தர் காம்ப்டன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1962)
 • 1912 – பசப்பா தனப்பா ஜாட்டி, இந்தியாவின் 5வது குடியரசுத் துணைத் தலைவர் (இ. 2002)
 • 1920 – சி. ஆர். ராவ், இந்திய-அமெரிக்க கணிதவியலாளர், புள்ளியியலாளர்
 • 1929 – ஆர்னால்ட் பால்மர், அமெரிக்கக் குழிப்பந்தாட்ட வீரர், தொழிலதிபர் (இ. 2016)
 • 1934 – பி. எம். சுந்தரம், தமிழக இசையியல் அறிஞர்

சிறப்பு நாள்:

 • அமெரிக்கப் பழங்குடியினர் மரபு நாள் (கயானா)
 • குழந்தைகள் நாள் (ஒண்டுராசு)
 • உலக தற்கொலைத் தவிர்ப்பு நாள்
 • தேசிய நாள் (ஜிப்ரால்ட்டர்)
 • ஆசிரியர் நாள் (சீனா)

நிகழ்வுகள்:

 • 1967 – கிப்ரல்டார் மக்கள் பிரித்தானியாவின் கீழ் தொடர்ந்திருக்க வாக்களித்தனர்.
 • 1974 – கினி பிசாவு போர்த்துக்கல்லிடம் இருந்து விடுதலை பெற்றது.
 • 1976 – பிரித்தானிய விமானம் ஒன்று யூகொஸ்லாவியாவின் சாக்ரெப் நகரில் வேறொரு விமானத்துடன் மோதியதில் 176 பேர் கொல்லப்பட்டனர்.
 • 2000 – மட்டக்களப்பு நகர முன்னாள் நகரத் தந்தை செழியன் பேரின்பநாயகம் படுகொலை செய்யப்பட்டார்.
 • 2002 – சுவிட்சர்லாந்து, ஐநாவில் இணைந்தது.
 • 2006 – ஈழப்போர்: முகமாலை முன்னரங்கப் பகுதியில் இலங்கை இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும்இடையே இடம்பெற்ற மோதலில் 28 இராணுவத்தினர் கொல்லப்பட்டு 119 பேர் படுகாயம் அடைந்தனர்.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here