முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 17

0

முக்கியமான நிகழ்வுகள் அக்டோபர் – 17

உலக வறுமை ஒழிப்பு நாள்

உலக வறுமை ஒழிப்பு நாள் (International Day for the Eradication of Poverty) ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 17 ஆம் நாள் உலகமுழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. உலகளாவிய ரீதியில் வறுமை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி பசிப்பிணியில் இருந்து மக்களை விடுவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பு 1992 ஆம் ஆண்டு வறுமை ஒழிப்பு நாளை அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொண்டது.

உலகில் வறுமை நிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ வேண்டியதன் அவசியம் குறித்து அனைத்து தரப்பினரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கத்துடன் வறுமை ஒழிப்பு தினத்தில் பல்வேறு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நாள் 1987 ஆம் ஆண்டு முதன் முதலாக பிரான்சின் பாரிஸ் நகரில் கடைப்பிடிக்கப்பட்டது. பசி, வறுமை, வன்முறை, பயம் என்பவற்றுக் பழியானோரை கௌரவிக்கும் வைகையில் 100,000 மக்கள் டொர்கேட்ரோவின் மனித உரிமைகள் மற்றும் விடுதலை சதுக்கத்தில் ஒன்று கூடினார்கள்.

To Follow  Channel –கிளிக் செய்யவும்

WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!