முக்கியமான நிகழ்வுகள் நவம்பர் – 26

0
Important Events Of November - 26
Important Events Of November - 26

உலக உடல் பருமன் எதிர்ப்பு தினம்

 • கட்டுக்கு மீறிய வகையில் உடல் பெரிதாக சதைப் போடுவதை உடல் பருமன் அல்லது உடல் கொழுப்பு என்கின்றனர்.அதிமாக கொழுப்பு சேருவது உடல் நலத்துக்கு ஆபத்தானது.
 • உடல் பருமன் ஒரு பெரிய சுகாதாரப் பிரச்சினையாகக் கருதப்படுகிறது.
 • உடல் பருமனால் ஆண்டிற்கு 2.6 மில்லியன் மக்கள் உலகளவில் இறக்கின்றனர்.
 • உடல் பருமனால் ஏற்படும் தீமையை விளக்கவே இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தேசிய சட்ட தினம்

 • அரசியல் சாசன சட்டம் இயற்றப்பட்ட தினம் தேசிய சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. வக்கீல்கள் சங்கம் மற்றும் நீதிமன்ற ஆணைக்குழு இணைந்து தேசிய சட்ட தினத்தைக் கொண்டாடுகிறது.
 • 1949ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அரசியல் நிர்ணய சபையால் நமது அரசியல் அமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.அதனால்தான் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ம் தேதி தேசிய சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது.
 • சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு உலகிலேயே மிகப் பெரிய அரசியலமைப்பாகும்.
 • இதில் மொத்தம் 22 பிரிவுகள்,12 அட்டவணைகள்,94 திருத்தங்கள்,450 உட்பிரிவுகள் மற்றும் 1,17,369 சொற்கள் உள்ளன.இது ஆங்கிலப் பதிப்பை தவிர ஒரு அதிகாரப்பூர்வ இந்தி மொழிப்பெயர்ப்பையும் கொண்டுள்ளது.
 • அரசியல் அமைப்புச் சட்டத்தின் முக்கிய நோக்கமே சமூகம், பொருளாதாரம் மற்றும் அரசியல்ரீதியாக அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்.
 • அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் கிடைக்க வேண்டும், சுதந்திரமாக இருக்க வேண்டும். அத்தகைய சுதந்திரம் அடுத்தவரின் சுதந்திரத்தையும், உரிமையையும் பாதிக்கக்கூடியதாக இருக்கக்கூடாது.

நிகழ்வுகள்

 • 1863 – அரசுத்தலைவர் ஆபிரகாம் லிங்கன் நவம்பர் 26ஐ தேசிய நன்றியறிதல் நாளாக அறிவித்து ஆண்டுதோறும் நவம்பர் மாத கடைசி வியாழக்கிழமை கொண்டாடுமாறு பணித்தார்.1942 முதல் இது நவம்பர் மாதத்தில் நான்காவது வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.
 • 1922 – எகிப்திய மன்னன் துட்டன்காமுன் என்பவனின் கல்லறைக்குள் ஹவார்ட் கார்ட்டர் மற்றும் கார்னாவன் பிரபு ஆகியோர் சென்றனர்.3000 ஆண்டுகளுக்குப் பின்னர் அதற்குள் சென்ற முதல் மனிதர்கள் இவர்களே.
 • 1949 – அம்பேத்கர் சமர்ப்பித்த இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தை இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் ஏற்றுக் கொண்டது.
 • 1957 – சாதியைப் பாதுகாக்கும் இந்திய அரசியல் சட்டப் பிரிவுகளைத் தீயிடும் போராட்டத்தை தந்தை பெரியார் ஆரம்பித்து வைத்தார்.
 • 1965 – சகாரா பாலைவனத்தில் பிரான்ஸ் ஆஸ்டெரிக்ஸ்-1 என்ற தனது முதலாவது செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியது.
 • 1970 – குவாதலூப்பேயின் பாஸ்தெர் நகரில் ஒரு நிமிடத்தில் பெய்த 1.5 அங்குல மழையே உலகில் இதுவரை பதியப்பட்ட மிகப்பெரும் மழைவீழ்ச்சி ஆகும்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here