முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-26

0

முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-26

இந்தியக் குடியரசு தினம்

  • இந்திய அரசு சட்டம் 1935ம் ஆண்டில் இருந்தற்கு மாற்றாக இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 1950ம் ஆண்டு ஜனவரி 26ம் நாள் செயலாக்கத்திற்கு வந்தது.
  • 1930ம் ஆண்டு இந்திய விடுதலை இயக்கத்தினர் பூர்ண சுவராஜ் என்ற விடுதலை அறைகூவலை ஜனவரி 26 அன்று வைத்தனர்.
  • அத்தினத்தை நினைவு கூறும் வகையில் ஜனவரி 26, 1950ல் இந்தியா குடியரசாக மாறியது.அதுமுதல் ஆண்டுதோறும் குடியரசு நாள் கொண்டாடப்படுகிறது.
  • இந்தியாவின் மூன்று தேசிய விடுமுறைகளில் குடியரசு தினமும் ஒன்றாகும்.
[Public domain], via Wikimedia Commons
  • மறைந்த இந்தியப் படைவீரர்களுக்காக இந்தியா கேட்டில் உள்ள அமர்சோதிக்கு வீரவணக்கம் செலுத்துவதுடன் தொடங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் மூவண்ணக் கொடியை ஏற்றி படைவீரர்களின் அணிவகுப்பைப் பார்வையிடுவார்.
  • நாட்டிற்காக சேவை புரிந்த வீரர்களுக்கு பதக்கங்களும், விருதுகளும் இவ்விழாவில் வழங்கப்படுகின்றன.
  • மாநிலங்களில் மாநில ஆளுநர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும், அரசுத்துறை மிதவைகளையும், பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார்.
  • மாநிலங்களில் சிறந்த காவலர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

சர்வதேச சுங்க தினம்

  • சர்வதேச சுங்க தினம் ஜனவரி 26 அன்று கொண்டாடப்படுகிறது.
  • பெல்ஜியம், பிரசைல்சை தலைமையிடமாக கொண்ட ஒரு சர்வதேச அரசு அமைப்பாக உலக வர்த்தக அமைப்பு (WCO) உள்ளது.
  • சர்வதேச சுங்க அமைப்பு அமைக்கப்பட்டு அதன் முதல் நிர்வாகக் கூட்டம் ஜனவரி 26, 1953ம் ஆண்டில் புருசெல்ஸில் நடைபெற்றது.
  • 17 ஐரோப்பிய நாடுகள் கலந்துகொண்டன. அதன் பின்னர் 161 சுங்க அதிகாரிகள் உள்பட சுங்கத்துறையினர் இந்த அமைப்பில் இணைந்தனர்.
  • இந்த அமைப்பு உலகின் 98 சதவீத பொருளாதார வளர்ச்சிக்குப் பாடுபட்டு வருகிறது.

ஆர்தர் கெய்லி நினைவு தினம்

பிறப்பு:

  • ஆகஸ்ட் 16, 1821ல் பிறந்தார்.
See page for author [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • பத்தொன்பதாம் நூற்றாண்டின் மிகச்சிறந்த கணிதவியலர்களில் ஒருவர்.
  • ஸில்வெஸ்டருடன் கூட்டாகப் பல கணித ஆய்வுகள் நடத்தியவர்.
  • ஸில்வெஸ்டரைப்போல் கணிதத்தின் பல பிரிவுகளிலும் தன் முத்திரையைப் பதித்தவர்.
  • ஆர்தர் 17 வது வயதிலிருந்து புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் ட்ரினிடி கல்லூரியில் கணிதம் பயின்றார்.
  • 21வது வயதில் ட்ரைபாஸ் என்ற தேர்வில் ஸீனியர் ராங்க்ளர் என்ற தகுதி பெற்று அதற்கும் உயர்வான ஸ்மித் பரிசையும் பெற்றார்.

ஆய்வுகள்:

  • n-பரிமாண வடிவியல்
  • மாற்றமுறாமைக் கோட்பாடு
  • தள வரைவுகளின் கணிப்பு வடிவியல்
  • நீள்வட்டச்சார்புகளின் கோட்பாடு
  • அணிக்கோவைகள், அணிகள், இருபடிய அமைப்புகள்
  • பதினான்கு ஆண்டுகள் சட்டத்துறையில் கெய்லி வேலை பார்த்தபோதும் 200க்கும் மேலாக கணிதத்தில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார்.

இறப்பு:

  • ஜனவரி 26, 1895ல் இறந்தார்

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!