முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-23
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்த தினம்
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி 23, 1897 – இறந்ததாகக் கருதப்படும் நாள் ஆகஸ்ட் 18, 1945.
- இந்திய சுதந்திரப் போராட்டத்தலைவராவார்.
- இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர்.
பிறப்பு
- இந்தியாவில் ஒரிசா (இன்றைய ஒடிசா) மாநிலத்தில் கட்டாக் எனும் இடத்தில் 1897 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் நாள் வங்காள இந்து குடும்பத்தில் காயஸ்தாவில் சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தார்.
- இவரது தந்தையின் குடும்பம் 27 தலைமுறையாக வங்க மன்னர்களின் படைத்தலைவர்களாகவும் நிதி மற்றும் போர் அமைச்சர்களாகவும் பணியாற்றி வந்த பெருமைமிக்க மரபுவழியை உடையது.
- இவரது தாயார் பிரபாவதிதேவி.
- தன் சிறு வயதில் தாய் தந்தையரை விட தன்னைக் கவனித்து வந்த தாதியான சாரதா என்பவருடன் பெரிதும் இருந்தார்.
கல்வி
- ஐந்து வயதான போது கட்டாக்கிலுள்ள பாப்டிஸ்ட் மிஷன் ஆரம்பப் பள்ளியில் இணைந்த சுபாஷ் ஏழு ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றார்.
- பின்னர் தன் உயர் கல்வியை கொல்கத்தா ரேவன்ஷா கல்லூரியில் தொடங்கிய சந்திர போஸ் 1913 ஆம் ஆண்டுத் தேர்வில் கொல்கத்தா பல்கலைக்கழக எல்லைக்குள் 2 ஆவது மாணவராகத் தேறினார்.
- இவரது தாயார் மிகுந்த தெய்வ பக்தி மிக்கவர். அதனால் சுபாஷும் சிறு வயது முதலே விவேகானந்தர் போன்ற ஆன்மிக பெரியார்களின் பால் ஈடுபாடுடையவராயும் அவர்களின் அறிவுரைகளைப் படித்து வருபவராயும் இருந்தார்.
பாரத ரத்னா விருது
- 1992-இல் சுபாஷ் சந்திரபோசுக்கு, இறப்புக்குப் பின்னான இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
- ஆனால் விருது வழங்கும் குழுவால் சுபாஷ் சந்திர போஸின் இறப்பு குறித்த ஆதாரங்களைத் தர முடியவில்லை எனவே உச்சநீதிமன்ற ஆணையின்படி இவ்விருது திரும்ப வாங்கப்பட்டது.
இரகசிய ஆவணங்கள்
- சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான இரகசிய ஆவணங்களை மேற்கு வங்காள அரசு 17 செப்டம்பர் 2015 அன்று வெளியிட்டது.
பிறப்புகள்
- 1814 – அலெக்சாண்டர் கன்னிங்காம், பிரித்தானியத் தொல்லியலாளர், படைத்துறைப் பொறியாளர் (இ. 1893)
- 1832 – எடுவார்ட் மனே, பிரான்சிய ஓவியர் (இ. 1883)
- 1833 – முத்து குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர் (இ. 1879)
- 1907 – ஹிடேகி யுகாவா, நோபல் பரிசு பெற்ற சப்பானிய இயற்பியலாளர் (இ. 1981)
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2021
For
Online Test Series கிளிக் செய்யவும்
To Join
Whatsapp கிளிக் செய்யவும்
To Join
Facebook கிளிக் செய்யவும்
To Join
Telegram Channel கிளிக் செய்யவும்
To Subscribe
Youtube Channel கிளிக் செய்யவும்




