முக்கியமான நிகழ்வுகள் ஜனவரி-19

0

ஜேம்ஸ் வாட் பிறந்த தினம்

பிறப்பு:

 • ஜனவரி 19, 1736ல் பிறந்தார்.
By Frédéric [GFDL (http://www.gnu.org/copyleft/fdl.html) or CC-BY-SA-3.0 (http://creativecommons.org/licenses/by-sa/3.0/)], via Wikimedia Commons

சிறப்பு:

 • இயந்திரப் பொறியாளர். முதன்முதலாக நீராவி எஞ்சினைக் கண்டுபிடித்தார்.
 • 1776 ஆம் ஆண்டில், முதல் நீராவி இயந்திரங்கள் நிறுவப்பட்டு, வர்த்தக நிறுவனங்களில் வேலை செய்தன.
 • வாட் என்ற திறனுக்கான அளவீட்டு அலகு (அனைத்துலக முறை அலகுகள்(SI) International System of Units (or “SI”)) நீராவி இயந்திரத்தின் வளர்ச்சிக்கு ஜேம்ஸ் வாட்டின் பங்களிப்பிற்காக அவரது பெயரில் வாட் என்று பெயரிடப்பட்டது.
 • 1889 ஆம் ஆண்டில் அறிவியல் மேம்பாட்டிற்கான பிரித்தானிய சங்கத்தின் இரண்டாம் காங்கிரஸால் இந்த அலகு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 • மேலும் 11 வது 1960 இல் திறன் (இயற்பியல்) சர்வதேச அமைப்பில் (அல்லது “SI”) வாட் என்ற அலகு இணைக்கப்பட்டது.
 • மின்சாரம் கணக்கிடும் அளவுமுறைக்கு ‘வாட்’ என இவரது பெயரே சூட்டப்பட்டது. இவரது கண்டுபிடிப்புகள் பல துறைகளுக்கும் பரவின. துணி காய வைக்கும் இயந்திரம், விஷக் காற்றைப் பிரித்தெடுக்கும் கருவி, சிற்பங்கள் மறு உருவாக்கம் செய்யும் கருவி என்று இவரது கண்டுபிடிப்புகளின் பட்டியல் நீள்கிறது.
 • ஹார்ஸ் பவர் (குதிரைத் திறன்) என்ற அளவு முறையை உலகுக்குத் தந்தவரும் இவரே.
Carl Frederik von Breda [Public domain], via Wikimedia Commons

கெளரவங்கள்:

 • 1784 ஆம் ஆண்டில் அவர் எடின்பரோவின் ராயல் சொசைட்டி உறுப்பினராக கெளரவிக்கப்பட்டார்.
 • 1787 ஆம் ஆண்டில் ராட்டர்டாமின் செய்முறைத் தத்துவத்திற்கான பட்டாவியன் சங்கத்தின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 1789 ஆம் ஆண்டில் கட்டட பொறியாளர்களுக்கான ஸ்மிட்டோனிய சங்கத்தின் உயர்மட்ட குழுவின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
 • 1806 ஆம் ஆண்டில், கிளாஸ்கோ பல்கலைக் கழகத்தின் சட்டத்திற்க்கான கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டது.
 • பிரெஞ்சு அகாடமி அவரை ஒரு அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினராக தேர்ந்தெடுத்தது மற்றும் 1814 இல் ஒரு வெளிநாட்டு இணைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இறப்பு:

 • ஆகஸ்ட் 25, 1819ல் இறந்தார்(வயது 83).

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here