முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி-1

0

முக்கியமான நிகழ்வுகள் பிப்ரவரி-1

ஓமந்தூர் ராமசாமி பிறந்த தினம்

பிறப்பு:

  • பிப்ரவரி  1,1895ல் பிறந்தார்.

சிறப்பு:

  • இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஒரு தமிழக அரசியல்வாதி.
  • காமராஜர் ஆதரவுடன் 1947-ல் ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் முதல்வராகப் பதவி ஏற்றார்.
  • 1949 ஏப்ரல் வரை முதல்வராக பதவி வகித்தார்.
  • இவரது ஆட்சிக் காலத்தில் சென்னை கோயில் நுழைவு அதிகாரச் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இதன்படி, தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் செல்வதற்கான முழு உரிமை பெற்றனர். ஜமீன், இனாம்தார் முறைகளையும் இவர் ஒழித்தார்.
  • ஊழலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்தார்.
  • பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.
  • இந்து சமய அறநிலையத்துறைச் சட்டத்தை இயற்றினார்.
  • கோயில்களில் வழக்கத்தில் இருந்த தேவதாசி முறையை ஒழிக்கவும் சட்டம் கொண்டுவந்தார்.
  • ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசு விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் மணிமண்டபம் அமைத்துள்ளது.
  • இந்திய அஞ்சல் துறை ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் நினைவாக அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.

இறப்பு:

  • ஓமந்தூர் ராமசாமி 25-8-1970ல் இறந்தார்.

கல்பனா சாவ்லா நினைவு தினம்

பிறப்பு:

  • 1961 ஜூலை 1ல் பிறந்தார்.
kalpana
By NASA [Public domain], via Wikimedia Commons

சிறப்பு:

  • சமஸ்கிருதத்தில் கல்பனா என்றால் கற்பனை என்று பொருள்.
  • கல்பனா மார்ச் 1995ல் நாசா விண்வெளி வீரர் பயிற்சிக் குழுவில் சேர்ந்தார்.1996 ஆம் ஆண்டு அவரது முதல் பயணத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.
  • 1984 இல் சோவியத் விண்கலத்தில் பயணித்த ராகேஷ் ஷர்மாவை அடுத்து விண்வெளி சென்ற முதல் இந்திய பெண் வீராங்கனை.
  • கல்பனாவின் முதல் பயணத்திலேயே அவர் 360 மணி நேரம் விண்வெளியில் இருந்து, 10.67 மில்லியன் கிலோமீற்றர்கள் பயணித்து பூமியைச் சுற்றி 252 முறைகள் வலம் வந்துள்ளார்.

விருதுகள்:

மறைவுக்கு பின் அளிக்கப்பட்ட விருதுகள்:

  • அமெரிக்கக் காங்கிரசினால் அவருடைய நினைவாக வழங்கப்பட்ட விண்வெளிப் பதக்கம் (Congressional Space Medal of Honor)
  • நாசாவின் விண்ணோட்ரப் பதக்கம் (NASA Space Flight Medal)
  • நாசாவின் சிறப்புமிகு சேவைக்கான பதக்கம் (NASA Distinguished Service Medal)
  • இளம் பெண் விஞ்ஞானிகளை ஊக்குவிக்க கர்நாடக அரசாங்கம் 2004 லிருந்து கல்பனா சாவ்லா விருது தருகிறது.

கிரகத்தின் பெயர்:

  • ஜூலை 19, 2001 ல் கண்டுபிடிக்கப்பட்ட 51826 எனும் எண்ணைக் கொண்ட சிறுகோள் ஒன்றிற்கு கல்பனா சாவ்லாவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த கிரகத்தின் வெப்பநிலை 159k ஆகும், இதன் சராசரி வேகம் வினாடிக்கு 16.5 கிலோமீட்டர்.

இறப்பு:

  • 2003 பிப்ரவரி 1ல் இறந்தார்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!