முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 10
கஸ்தூரிபாய் காந்தி பிறந்த தினம்
பிறப்பு:
- ஏப்ரல் 11,1869 ல் பிறந்தார்.
- இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பெரும்வணிகர் குடும்பத்தில் கோகுல்தாஸ் கபாடியாவின் மகளாக பிறந்தார் கஸ்தூரிபாய்.இவரது தாய் மொழி குஜராத்தி.
- கணவர்: மோகன்தாசு கரம்சந்த் காந்தி(மகாத்மா காந்தி)

சிறப்பு:
- கணவர் ஏற்ற தேசிய விரதத்திற்காக தானும் உடன் உழைத்தவர்.காந்தியுடன் சேர்ந்து தென்னாப்பிரிக்காவில் கறுப்பர்களின் மீதான இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டவர்.
- இந்திய விடுதலைப் போரில் பங்கு கொண்டு பல முறை சிறை சென்றவர்.
- கணவரின் சத்தியம், அகிம்சை, இந்திய விடுதலை இயக்கம் ஆகிய கொள்கைகளுக்கு தன் வாழ்நாள் முழுவதும் முழு ஒத்துழைப்பையும் அளித்தார்.
- 1913ல் இந்தியா வம்சாவழித் தொழிலாளர்கள் மீதான கொடிய சட்டங்களைக் கண்டித்து காந்திஜி நடத்திய அறப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறை சென்றார்.
- வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது (1942) கைது செய்யப்பட காந்தியுடன் கஸ்தூரிபாய் காந்தியும் கைதானார். இருவரும் பூனாவிலுள்ள ஆகா கான் அரண்மனையில் சிறை வைக்கப்பட்டனர். நுரையீரல் அழற்சி, மூச்சுக்குழல் அழற்சி நோயினால் மிகுந்த வேதனையுற்றார். சிறையில் இருக்கும்போது சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இறப்பு:
- பிப்ரவரி 22 1944ல் இறந்தார்(74 வயது).
நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் தினம்
- நடுக்குவாதம் அல்லது பார்கின்சன் நோய் (Parkinson’s disease) அல்லது பீ.டி என்பது மைய நரம்பு மண்டலத்தைச் சிதைக்கின்ற ஒரு நோய் ஆகும்.
- பொதுவாக இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இயக்கத்திறன்கள், பேச்சு மற்றும் மற்ற செயல்பாடுகள் சீராக இயங்கமாட்டாது.
- மூளையின் தொழிற்பாடுகளில் ஒன்றாகிய உடலியக்கங்களை ஒருங்கிணைத்தல் பாதிப்படைவதால் இந்நோய் ஏற்படுகின்றது.
- முக்கிய அறிகுறி: நடுக்கம்
- பார்கின்சோனிசம் என்ற வார்த்தை டோமாமைன் இழப்பின் காரணமாக ஏற்படும் தசை நார் வலிப்பு, விறைப்பு மற்றும் இயக்க மந்தநிலை ஆகியவற்றின் அறிகுறிகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.
-
“நடுக்குவாதம்” என்பது “முதன்மை பார்கின்சோனிசம்” என்பதன் இணைச்சொல்லாக இருக்கிறது.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்