முக்கியமான நாட்கள் மற்றும் விவரங்கள் – ஜனவரி 2019

0

முக்கியமான நாட்கள் மற்றும் விவரங்கள் – ஜனவரி 2019

மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 2019
ஜனவரி மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF Download

இங்கு ஜனவரி மாதத்தின் முக்கிய நாட்கள், கருப்பொருள் மற்றும் அன்றைக்கு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இது அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் உதவும். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.

தேதி தினம் விவரங்கள்
ஜனவரி 01 பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு [DRDO] தினம்.

ஜனவரி 1, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு, டி.ஆர்.டீ.ஓ தினமாகக் கொண்டாடப்படுகிறது. டி.ஆர்.டீ.ஓ 1958 ல் பாதுகாப்பு துறையில் ஆராய்ச்சி வேலைகளை அதிகரிக்க 10 ஆய்வகங்களுடன் நிறுவப்பட்டது.

ஜனவரி 4 உலக பிரெயிலி தினம்

ப்ரெயிலி கண்டுபிடிப்பாளர் லூயிஸ் பிரெயிலியின் பிறந்த நாளன்று உலக பிரெயிலி தினம் ஆண்டுதோறும் ஜனவரி 4 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினம் பார்வையற்றோர் மற்றும் பார்வை குறைபாடுடைய மக்கள் வாசிப்பதற்கும் எழுதுவதற்கும் உதவிய லூயி பிரெய்லியின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்கானதாகும்.

ஜனவரி 12 தேசிய இளைஞர் தினம்

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான ஜனவரி 12 தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஜனவரி 12ம் தேதியான இன்று சுவாமி விவேகானந்தர் பிறந்த தினமாகும். இந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாக 1984ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது. இதனால் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் இந்த தினத்தில் இளைஞர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தீம் ‘Channelizing Youth Power for Nation Building‘.

ஜனவரி 13 குரு கோபிந்த் சிங்கின் 352 வது பிறந்த நாள்

பீகாரில், குரு கோபிந்த் சிங்கின் 352 வது பிறந்த நாள் விழா பிரகாஷ் உத்சவாக மத பக்தி மற்றும் உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. 1666 ஆம் ஆண்டு பாட்னா சாஹிப்பில் பிறந்த குரு கோபிந்த் சிங் 10 வது சீக்கிய குரு ஆவார். அவரது தந்தை குரு தேக் பகதூர் சிங்கிற்கு பிறகு சீக்கியர்களின் தலைவராக ஒன்பது வயதில் பதவி ஏற்றார். குரு கோபிந்த் சிங்கின் பிறந்த நாள் விழா பாட்னா சாஹிப்பிலும் பிரகாஷ் உத்சவாக கொண்டாடப்படுகிறது.

ஜனவரி 23 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஜெயந்தி

நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஜனவரி 23, 1897ல் பிறந்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற போது வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயருக்கு எதிராகத் தாக்குதல் நடத்தியவர். ஆங்கிலேயர்கள் இவருக்கு பயந்து தான் சுதந்திரம் தந்தார்கள் என்ற கூற்றும் உண்டு. அத்தகைய மாவீரன் பிறந்த நாள் ஜனவரி 23.

ஜனவரி 24 சர்வதேச கல்வி தினம்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 24 அன்று சர்வதேச கல்வி தினம் கொண்டாடப்படுகிறது. மனித உரிமைகள் பற்றிய உலகளாவிய பிரகடனத்தின் 26 வது ஷரத்தில் கல்விக்கான உரிமை உள்ளது. இந்த அறிவிப்பு இலவச மற்றும் கட்டாய அடிப்படை கல்விக்கு அழைப்பு விடுக்கிறது.

ஜனவரி 24 தேசிய பெண் குழந்தைகள் தினம்

தேசியப் பெண் குழந்தைகள் தினம் ஜனவரி,24 அன்று புதுதில்லியில் மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டாடப்படுகிறது. பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்குக் கல்வி அளிப்போம் என்ற திட்டத்தின் ஆண்டு விழாவாகவும் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.“ஒளிமயமான எதிர்காலத்திற்காகப் பெண்குழந்தைகளுக்கு அதிகாரம் அளித்தல்” என்பது இந்த விழாவின் மையப்பொருளாக இருக்கும்.

ஜனவரி 25 தேசிய வாக்காளர்கள் தினம்

9வது தேசிய வாக்காளர் தினம் தேர்தலில் அனைத்து குடிமக்களின் மேம்பட்ட பங்களிப்புக்காக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீம் – “No Voter to be Left Behind”. சிறந்த தேர்தல் நடைமுறைகளுக்கான தேசிய விருதுகள் தேர்தல்களின் போது சிறப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும்.

ஜனவரி 26 70வது குடியரசு தினம்

70வது குடியரசு தினம் நாடு முழுவதும் தேசபக்தி மற்றும் ஆர்வத்துடன் கொண்டாடப்பட்டது. தேசிய தலைநகரில் ராஜ்பாத்தில் முக்கிய விழா ஏற்பாடு செய்யப்பட்டது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மூவர்ணக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை பெற்றார். தென் ஆப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசா இந்த ஆண்டு பரேட்டில் சிறப்பு விருந்தாளியாக இருந்தார்.

ஜனவரி 30 தேசிய தியாகிகள் தினம்

நாடு முழுவதும் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் 71வது நினைவு தினத்தன்று அஞ்சலி செலுத்தினர். இந்த தினத்தை தியாகிகள் தினமாகக் கொண்டாடுகின்றனர். இதே நாளில் 1948 ல் அவர் படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

PDF Download

முக்கியமான நாட்கள் மற்றும் அவற்றின் விவரங்கள்- ஜனவரி video

2018 முக்கிய தினங்கள் PDF Download

நடப்பு நிகழ்வுகள்  2018
 Whats App Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!