TN Weather Update: வலுபெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் கொட்டித் தீர்க்கபோகும் கனமழை.. வானிலை மையம் வெளியிட்ட தகவல்..!!
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் சமீப காலமாக தமிழகத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழல் ஏப்ரல் 14 வரை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதை தொடர்ந்து, நேற்று (08-04-2025) இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளிலும் நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் இது குறித்து தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதாவது, “தெற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுபெற்றுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் படிப்படியாக வலுகுறையக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் 12 ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது”.



























