தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கொட்டித் தீர்க்கும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சில பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும், இந்த சூழல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டது.
Central Bank of India- வில் Faculty வேலை – மாத சம்பளம்: ரூ.20,000/- || முழு விவரங்களுடன்!
இந்நிலையில் தலைநகர் சென்னையில் இன்று (16-04-2025) பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை புறநகர் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மும்பை-ஐதராபாத், பெங்களூரு-சென்னை மற்றும் திருச்சி-சென்னை விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, “அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பலத்த இடி மின்னலுடன் கூடிய கன மழை பொழிய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது”.
Join the ExamsDaily Whatsapp Group

























