IIT Madras- ல் Junior Technician வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
IIT Madras ஆனது Office Assistant, Junior Technician பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 4 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Office Assistant, Junior Technician பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
- பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கல்வி தகுதி 10ம் / 12ம் வகுப்பு / Diploma / ITI என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Amazon நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிராதீங்க!
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,000/- ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 28.02.2025ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

























