சென்னை IIT-ல் புதிய இளநிலை பட்டப்படிப்பு அறிமுகம் – ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் படிக்கலாம்!

0
சென்னை IIT-ல் புதிய இளநிலை பட்டப்படிப்பு அறிமுகம் - ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் படிக்கலாம்!
சென்னை IIT-ல் புதிய இளநிலை பட்டப்படிப்பு அறிமுகம் - ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் படிக்கலாம்!
சென்னை IIT-ல் புதிய இளநிலை பட்டப்படிப்பு அறிமுகம் – ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் படிக்கலாம்!

சென்னை ஐஐடியில் மின்னணு அமைப்பியல் என்ற புதிய ஆன்லைன் பட்டப்படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழாவில் மத்திய கல்வித்துறை அமைச்சர் காணொலி வாயிலாக பங்கேற்றார்.

பட்டப்படிப்பு:

இந்தியாவில் தேசிய கல்விக் கொள்கையின் படி பள்ளி மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது சென்னை ஐஐடியில் ‘இளநிலை மின்னணு அமைப்பியல்’ என்ற புதிய பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி துறையில் திறமையான பட்டதாரிகளை உருவாக்கும் வகையில் இந்த படிப்பு வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பு தேர்வு மையங்களில் CCTV கேமராக்கள் பொருத்த உத்தரவு – மாநில கல்வித்துறை அதிரடி முடிவு!

இந்த படிப்பை மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக 4 வருடங்கள் படிக்கலாம் என்று ஐஐடி தெரிவித்துள்ளது. இன்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வாயிலாக இந்த பட்டப்படிப்பு அறிமுக விழாவில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர் ஏற்கனவே ஐஐடி அறிமுகப்படுத்திய B.S டேட்டா சயின்ஸ் என்ற பட்டப் படிப்பு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து தற்போது பி.எஸ்., எலக்ட்ரானிக் சிஸ்டம் என்ற பட்ட படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கு IIT இயக்குநர் தலைமையிலான குழுவை பாராட்டுவதாக அவர் தெரிவித்தார். மேலும் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்த இது சரியான அணுகுமுறை என்றும் கூறியுள்ளார். அவரை தொடர்ந்து பேசிய ஐஐடி இயக்குனர் ‘அனைவருக்கும் IIT என்ற நோக்கில் ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் ரூபாய்க்கு குறைவாக உள்ள மாணவர்கள் இந்த படிப்பில் சேர்க்கப்படுவார்கள் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!