ICICIன் சிறந்த முதலீட்டு திட்டம் அறிமுகம் – ரூ.100 மட்டும் போதும்! முழு விவரம் இதோ!

0
ICICIன் சிறந்த முதலீட்டு திட்டம் அறிமுகம் - ரூ.100 மட்டும் போதும்! முழு விவரம் இதோ!

ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் அதன் நிஃப்டி லார்ஜ் மிட்கேப் 250 இன்டெக்ஸ் ஃபண்டை நேற்று அறிமுகம் செய்துள்ளது.

புதிய அறிமுகம்:

இந்தியாவில் உள்ள மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஐசிஐசிஐ புருடென்ஷியல் ஹவுஸ் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் தற்போது நிஃப்டி லார்ஜ் மிட்கேப் 250 இன்டெக்ஸ் ஃபண்ட் (Nifty LargeMidcap 250 Index Fund) திட்டத்தை நேற்று (பிப்.23) அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டம் நிஃப்டி லார்ஜ்மிட்கேப் 250 குறியீட்டில் பத்திரங்களைக் கொண்ட நிறுவனங்களில் அவர்கள் குறியீட்டில் குறிப்பிடும் அதே வெயிட்டேஜில் முதலீடு செய்யும்.

கைநிறைய ஊதியத்துடன் சென்னை TCS நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மேலும் IDCW பேஅவுட் மற்றும் IDCW மறுமுதலீடு துணை விருப்பங்களுடன் IDCW விருப்பத்தை இந்த திட்டம் வழங்குகிறது. மேலும் இந்த புதிய ஐசிஐசிஐ மியூச்சுவல் ஃபண்ட்டில், புதிய நிதிக்கான சந்தா இன்று தொடங்கி மார்ச் 7 வரை முடிவடையும். அது மட்டுமில்லாமல் இந்த திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 100 ஆகும். அது மட்டும் இல்லாமல் ஸ்விட்ச் இன்களுக்கான குறைந்தபட்ச கூடுதல் விண்ணப்பத் தொகை ரூ.100, SIP களில் குறைந்தபட்ச முதலீடு ரூ. 100 ஆகும். இதில் ஒருவர் குறைந்தது ஆறு தவணையை செய்ய வேண்டும். இந்த புதிய திட்டத்தின் படி அதே வெயிட்டேஜில் நிஃப்டி லார்ஜ்மிட்கேப் 250 இன்டெக்ஸில் உள்ள பத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிறுவனங்களில் முதலீடு செய்வதே நோக்கம் ஆகும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!