IBPS PO வேலைவாய்ப்பு 2025 – 5200+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

0

IBPS PO வேலைவாய்ப்பு 2025 – 5200+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் எனப்படும் IBPS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Probationary Officer/ Management Trainee (PO/MT) பணிக்கென காலியாக உள்ள 5208 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

Probationary Officer/ Management Trainee (PO/MT) பணிக்கென காலியாக உள்ள 5208 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் ரூ.25,000/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பட்டதரர்களுக்கு ரூ.48480/- முதல் ரூ.85920/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்:

SC/ST/PWBD விண்ணப்பதார்கள் – ரூ.175/-

மற்ற விண்ணப்பதார்களுக்கு – ரூ.850 /-

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு (Preliminary Examination, Main Examination)மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.07.2025 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!