IBPS ஆணையத்தில் B.E முடித்தவர்களுக்கான வேலை – ரூ.3,02,169/- சம்பளம் || முழு விவரங்களுடன்!
Institute of Banking Personnel Selection (IBPS) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் DGM, Professor, Data Analyst பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
IBPS காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி DGM, Professor, Data Analyst பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி:
அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Com / M.Com / MBA (Finance) / CA / CAIIB / Ph.D / B.E / B. Tech / M.E / M.Tech / M.Sc / MCA தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
IBPS வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 23 என்றும் அதிகபட்ச வயதானது 61 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
BHEL நிறுவனத்தில் ரூ.88,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!
ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ. 87,675/- முதல் ரூ.3,02,169/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
IBPS தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் Presentation, Group Exercises, Online Examination, Shortlisting மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 21.04.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



























