இந்திய விமான படையில் 317 காலிப்பணியிடங்கள் – ரூ.1,77,500/- ஊதியம் & முழு தகவல்களுடன்..!

0
இந்திய விமான படையில் 317 காலிப்பணியிடங்கள் - ரூ.1,77,500/- ஊதியம் & முழு தகவல்களுடன்..!
இந்திய விமான படையில் 317 காலிப்பணியிடங்கள் - ரூ.1,77,500/- ஊதியம் & முழு தகவல்களுடன்..!
இந்திய விமான படையில் 317 காலிப்பணியிடங்கள் – ரூ.1,77,500/- ஊதியம் & முழு தகவல்களுடன்..!

இந்திய விமானப்படையில் இருந்து நாடு முழுவதும் உள்ள தகுதியானவர்களுக்காக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Commissioned Officer பதவிகளுக்கு 317 காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே வரிசைப்படுத்தி உள்ளோம். தகுதி உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய விமானப்படை
பணியின் பெயர் Commissioned Officer
பணியிடங்கள் 317
விண்ணப்பிக்க கடைசி தேதி 30.12.2021
விண்ணப்பிக்கும் முறை Online
இந்திய விமானப்படை காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி, இந்திய விமானப்படையில் Commissioned Officer பதவிகளுக்கு என மொத்தமாக 314 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படை வயது வரம்பு:

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்களாக கருதப்படுகின்றனர்.

IAF கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனங்களில் ஏதேனும் ஒரு Degree அல்லது BE/ B.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IAF ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.56,100/- முதல் அதிகபட்சம் ரூ.1,77,500/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அனைவரும் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இது குறித்து மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ இணையத்தளத்தில் உள்நுழைந்து விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. 30.12.2021 ம் தேதிக்கு பின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!