HVF நிறுவனத்தில் Technician Apprentice வேலை – 300+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

0

HVF நிறுவனத்தில் Technician Apprentice வேலை – 300+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

ஆவடியில் உள்ள கனரக வாகன தொழிற்சாலை (HVF Avadi) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Graduate, Technician Apprentice பணிக்கான 320 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

HVF காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Graduate, Technician Apprentice பணிக்கென காலியாக உள்ள 320 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Graduate Apprentice – 110 பணியிடங்கள்

Technician Apprentice – 110 பணியிடங்கள்

Non-Engineering Graduate Apprentice – 100 பணியிடங்கள்

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Com / B.Sc / BA / BBA / BCA / BE / B.Tech / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRB Technical Grade 1 தேர்வு முடிவுகள் வெளியீடு – உடனே டவுன்லோட் செய்யவும்!

HVF வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.8,000/- முதல் ரூ.9,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HVF தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.03.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!