10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? இதோ உங்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு..!

0
10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? இதோ உங்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு..!
10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? இதோ உங்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு..!
10ம், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? இதோ உங்களுக்கான மத்திய அரசு வேலைவாய்ப்பு..!

தலைமையக காலாட்படை பள்ளி (HQ Infantry School) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Draughtsman, Lower Division Clerk, Stenographer, Cook போன்ற பல்வேறு பணிகளுக்கு என மொத்தமாக 101 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை அனைவருக்கும் எளிதில் புரியும் வண்ணம் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022

 

நிறுவனம் HQ Infantry School
பணியின் பெயர் LDC, Draughts Man, Stenographer, Cook and Other
பணியிடங்கள் 101
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

தலைமையக காலாட்படை பள்ளி பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், தலைமையக காலாட்படை பள்ளியில் (HQ Infantry School) காலியாக உள்ள Draughts Man, Lower Division Clerk, Stenographer, Civilian Motor Driver, Cook, Translator, Barber, Stenographer Grade-II, Civilian Motor Driver (OG), Artist or Model Maker ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 101 பணியிடங்கள் காலியாக உள்ளது.

தலைமையக காலாட்படை பள்ளி கல்வி விவரம்:
  • Stenographer Grade-II, Lower Division Clerk பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Civilian Motor Driver, Cook, Barber பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Translator பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 12 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Draughtsman பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10 ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Artist or Model Maker பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளி / கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Drawing செய்வதற்கான தகுதி சான்றிதழ் வைத்திருப்பவராகவும் இருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
தலைமையக காலாட்படை பள்ளி அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பணிக்கு தகுந்தாற்போல் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாகும்.

தலைமையக காலாட்படை பள்ளி வயது விவரம்:
  • Civilian Motor Driver (Ordinary Grade), Artist or Model Maker மற்றும் Draughtsman ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • மற்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
  • SC / ST – 05 வருடம், OBC – 03 வருடம், PWD – 10 வருடம், PWD (OBC) – 13 வருடம், PWD (SC/ST) – 15 வருடம் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

HQ Infantry School ஊதிய விவரம்:
  • Barber, Artist or Model Maker பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.56,900/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Lower Division Clerk, Civilian Motor Driver (OG), Translator, Cook பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Draughtsman, Stenographer Grade-II பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் ரூ.25,500/- முதல் அதிகபட்சம் ரூ.81,100/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
HQ Infantry School தேர்வு செய்யும் முறை:

HQ Infantry School பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview, Written Test, Skill Test மற்றும் Trade Test வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

உங்கள் அரசுப்பணி கனவை நினைவாக்க – TNPSC Coaching Center Join Now

HQ Infantry School விண்ணப்ப கட்டணம்:
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களிடம் ரூ.50/- விண்ணப்பக் கட்டணமாக வசூலிக்கப்படும்.
  • SC / ST / PwD பிரிவினர், உடல் ஊனமுற்றவர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் போன்றவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
HQ Infantry School விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (25.07.2022) வந்து சேருமாறு தபால் செய்ய வேண்டும்.

HQ Infantry SChool Notification & Application Link

HQ Infantry SChool Official Website Link

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!