புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை – முழு விவரங்கள் இதோ!!

18
புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை - முழு விவரங்கள் இதோ!!
புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை - முழு விவரங்கள் இதோ!!
புதிய ரேஷன் கார்டு பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை – முழு விவரங்கள் இதோ!!

தமிழகத்தில் புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான ஆன்லைன் செயல்முறை பற்றிய விவரங்களை இந்த பதிவில் காண்போம்.

புதிய குடும்ப அட்டை:

தமிழக அரசு மக்களுக்கு வழங்கும் அனைத்து நலத்திட்டங்களையும், உதவிகளையும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைகள் மூலமாக தான் வழங்கும். மேலும், சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிப்பதற்கும் இது முக்கிய ஆவணமாகும். புதிய ரேஷன் அட்டைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம்:

புதிய குடும்ப அட்டையை பெறுவதற்கு https://tnpds.gov.in/ என்ற இணையதளத்தில் லாகின் செய்ய வேண்டும். அங்கு மின்ணனு அட்டை சேவைகள் என்ற விருப்பத்தின் கீழ் மின்ணனு அட்டை விண்ணப்பம் என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதில், புதிய அட்டை என்பதை தேர்வு செய்ய வேண்டும். Name of family head என்ற இடத்தில் தமிழிலும், ஆங்கிலத்திலும் பெயரை பதிவிட வேண்டும்.

தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பு – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்!!

அதன்பிறகு, தங்களின் விவரங்களை சரியாக பதிவு செய்து, குடும்ப தலைவரின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் எந்த வகையான அட்டை என்பதை தேர்வு செய்ய வேண்டும். இருப்பிட சான்று என்ற இடத்தில் தங்களின் கேஸ் பில், டெலி போன் பில், தண்ணீர் பில் போன்ற ஏதாவது ஒன்றை உள்ளிடவும். பிறகு எரிவாயு இணைப்பு நிறுவனத்தின் பெயரை தேர்வு செய்ய வேண்டும். மேலும், எத்தனை சிலிண்டர்கள் உள்ளது என்பதையும் பதிவிட வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

அடுத்ததாக குடும்ப உறுப்பினர்கள் சேர்க்கை என்ற இடத்தில் முதலாவதாக குடும்ப தலைவர் பெயரை கொடுக்கவும். ஏதேனும் விவரங்கள் விடுபட்டிருந்தால் அவற்றையும் இங்கே கொடுக்கலாம். இப்போது செமி என்ற தேர்வை தேர்வு செய்ய வேண்டும். இப்பொழுது குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை உள்ளிட்ட வேண்டும். அதன் பிறகு எரிவாயு இணைப்பு பற்றிய விவரங்களில் கேஸ் இணைப்பு பதிவு செய்யப்பட்ட நபரின் பெயர் கொடுக்க வேண்டும். அதாவது கேஸ் இணைப்பு யார் பெயரில் உள்ளது, எத்தனை இணைப்பு உள்ளது என்பதையும் கொடுத்து உறுதிபடுத்த வேண்டும்.

இப்பொழுது உங்கள் விவரங்கள் அனைத்தையும் சரியாக உள்ளதா என்பதை பார்த்து பதிவு செய்ய வேண்டும். அதில் ஏதெனும் தவறு இருந்தால் அவை சிவப்பு நிறத்தில் காண்பிக்கும். அவற்றை சரி செய்து உறுதி செய்ய வேண்டும். உங்களது மின்னணு அட்டை விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டதற்கான குறிப்பு எண் வரும். அதனை சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை வைத்து தான் உங்களது கார்டின் நிலையை அவ்வப்போது பார்க்க முடியும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

18 COMMENTS

  1. I’m new married, so how can I apply a New ration card, and what is the procedure, And what are the documents required.

  2. When giving time of smart card in civil supply office. They asking money 500 rupees. Why it is like. How we can complaint

  3. I want ration smart card with name printed in it…. But my name is in the register… But not in my husbands Ration card… It’s missing what should I do

  4. Hi I am Dilip Kumar want to Change the Card from non commodity to commodity kindly let us know how to proceed further. Even I asked the ration people also but no response.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!