வருமான சான்றிதழ் வாங்கணுமா..?? ஒரே ஒரு போன் மட்டும் போதும்..!! நீங்களே ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்..!!

0
?????? ????????? ?????????..?? ??? ??? ???? ??????? ??????..!! ??????? ????????? ?????????? ?????????..!!
வருமான சான்றிதழ் வாங்கணுமா..?? ஒரே ஒரு போன் மட்டும் போதும்..!! நீங்களே ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்..!!
வருமான சான்றிதழ் வாங்கணுமா..?? ஒரே ஒரு போன் மட்டும் போதும்..!! நீங்களே ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம்..!!

வருமான சான்றிதழ் என்பது தனி நபர் அல்லது ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானத்தை உறுதிப்படுத்தும் ஒரு ஆவணமாகும். அத்தகைய வருமான சான்றிதழுக்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கும் முறை பற்றி கீழே விரிவாக பார்க்கலாம் வாருங்கள்.

வருமான சான்றிதழுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி:
  • முதலில் https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx என்ற இணையதளத்திற்கு சென்று அதில் இ-சேவை ஐடியை register செய்ய வேண்டும். பிறகு sign up என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் தங்களுடைய பெயர், முகவரி , மாவட்டம் , தாலுக்கா , மொபைல் எண் , மின்னஞ்சல் முகவரி, ஆதார் எண், login id, password , confirm password , மற்றும் captcha code ஆகியவற்றை type செய்து கொள்ளவும்.
  • பிறகு sign up என்பதை கிளிக் செய்து, தங்களுடைய மொபைல் நம்பருக்கு வரும் OTP எண்ணை TYPE செய்து, ENTER என்பதை கிளிக் செய்தால் உங்களுடைய விவரங்கள் REGISTRATION ஆகிவிடும்.
  • அடுத்து, LOGIN செய்ய HOME PAGE-க்கு சென்று , அதில் USERNAME, PASSWORD ஆகியவற்றை TYPE செய்து , அவற்றுள் கொடுக்கப்பட்டுள்ள CAPTCHA CODE-ஐ என்டர் செய்து, LOGIN என்ற பட்டனை கிளிக் செய்யவும்.இப்போது உங்கள் ID LOGIN ஆகிவிடும்.

ரேஷன் பயனர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான தகவல்..!! வரும் ஞாயிற்றுக்கிழமை ரேஷன் கடைகள் இயங்கும்..!!

  • பிறகு, LOGIN உள் சென்றவுடன் service என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் Revenue department-ல் கொடுக்கப்பட்டுள்ள list out-ல் நீங்கள் எதற்கு விண்ணப்பம் செய்ய போறீங்களோ அதனை select செய்து proceed என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அடுத்து can நம்பரை பதிவு செய்து அதில் உங்கள் விவரம், தந்தை பெயர் , தாயார் பெயர் , குடும்ப உறுப்பினர் விவரம் என அனைத்தையும் பதிவு செய்து நீங்கள் select செய்த கோரிக்கைக்கு தேவையான document upload செய்யவும்.
  • கடைசியாக make payment ஆப்சனில் கிரெடிட் கார்டு , டெபிட் கார்டு பயன்படுத்தி விண்ணப்ப கட்டணம் ரூ.60 செலுத்தவும். நீங்கள் அப்ளை செய்த சில நாட்களுக்கு பின் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!