தமிழகத்தில் நாளை (ஏப்.29) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா நாளை வெகு விமர்சியாக நடைபெற உள்ளன. இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்திற்கு( ஏப்ரல் 29) நாளை உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை:
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையான கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இந்த கோவில் பூலோகத்தின் வைகுண்டமாக போற்றப்படுகிறது. 5000 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான கோவிலான இந்த கோவில் பல சிறப்புகளை தன்னகத்தில் கொண்டது. மார்கழியில் வரும் “வைகுண்ட ஏகாதசி” தினத்தில் இக்கோவிலில் “சொர்க்க வாசல்” திறந்து, அதில் பங்கேற்று வழிபட பல லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவது சிறப்பு அம்சமாகும். அதன் பின்னர் ஸ்ரீரங்கம் நம்பெருமாள் வருடத்திற்கு ஏழு முறை மட்டும், தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருள்வார். அந்த விழாக்கள் வசந்த உற்சவம், விஜயதசமி, வேடுபறி, பூபதி திருநாள் பாரிவேட்டை , ஆதி பிரம்மோற்சவம் ஆகும். இந்நிலையில் ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் வருடம்தோறும் 10 நாட்கள் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
TN Job “FB
Group” Join Now
அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரைத் தேர்த்திருவிழா கடந்த 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. சித்திரைத் திருவிழாவின் ஐந்தாம் திருநாள் நேற்று முன் தினம் இரவு நம்பெருமாள் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். முன்னதாக நம்பெருமாள் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து அணுமந்த வாகனத்தில் எழுந்தருளி வழிநடை உபயங்கள் கண்டருளினார். அதனைத் தொடர்ந்து சித்திரை வீதிகளில் வலம் வந்து பின்னர் வாகன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து, பின்னர் அங்கு நம்பெருமாளுக்கு மங்கள ஆரத்தி எனப்படும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று 6-ம் திருநாளன்று, நம்பெருமாள், கஜ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கபட்டு, திருச்சி மாவட்ட ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாக்கியாவை தொழில் தொடங்க சொன்ன கோபி, மகிழ்ச்சியில் ராதிகா – இன்றைய எபிசோட்!
அந்த அறிக்கையில், ஸ்ரீரங்கம் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை, இருப்பினும் இந்த விடுமுறையானது பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வு நடந்தால் அதற்கு பொருந்தாது என குறிப்பிட்டுள்ளார். மேற்கண்ட விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறைந்த பணியாளர்களோடு செயல்படும்.இந்த விடுமுறைக்குப் பதிலாக வரும் மே 7ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.