History – Delhi Sultans Q & A!!

1
History - Delhi Sultans Q & A - For Competitive Exams Download
History - Delhi Sultans Q & A - For Competitive Exams Download
History – Delhi Sultans Q & A

Q.1) Mamluk is the term for the Arabic designation of a __________.
a) Slave b) King
c) Queen d) Soldier

மம்லுக் என்ற பெயர் ஒரு _______ க்கான அரபுத் தகுதிச்சுட்டாகும்.
a) அடிமை b) அரசர்
c) இராணி d) படைவீரர்

Solution:

Q.2) Ibn Batuta was a traveller from __________.
a) Morocco b) Persia
c) Turkey d) China

இபன் பதூதா ஒரு _________ நாட்டுப்பயணி
a) மொராக்கோ b) பெர்சியா
c) துருக்கி d) சீனா

Solution: According to Ibn Battuta, the Moroccan traveller, ‘Raziya rode on horseback as men ride, armed with a bow and quiver, and surrounded by courtiers. She did not veil her face.’
மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பயணி, இபின் பதூதாவின் கூற்றுப் படி ‘குதிரை மீது ஆண்கள் சவாரி செய்வதைப் போல், கையில் வில் அம்புடன், அரச பரிவாரங்கள் சூழ இரஸியாவும் சவாரி செய்தார். தனது முகத்துக்கு அவர் திரையிடவில்லை’.

Q.3) Find out the correct statement:
a) Quwat-ul-Islam mosque at Ajmer
b) Dhani Dinka Jhonpara mosque at Delhi
c) Qutb minar in Gujarat
d) All are correct

கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானவை?
a) குவ்வஉல் இஸ்லாம் என்ற மசூதி அஜ்மீரில் உள்ளது.
b) தாய்டின்கா ஜோன்பரா என்ற மசூதி டெல்லி உள்ளது.
c) குதுப்மினார் குஜராத்தில் உள்ளது.
d) அனைத்தும் சரி

Solution: The Quwwat-ul-Islam or Might of Islam Mosque is the earliest surviving mosque in India and stands in the Qutb Minar enclosure in Delhi. It was begun in 1193 by Qutb-ud-Din Aibak
குவ்வத்-உல்-இஸ்லாம் அல்லது இஸ்லாமியரின் மசூதி இந்தியாவில் எஞ்சியிருக்கும் ஆரம்பகால மசூதியாகும், இது டெல்லியில் உள்ள குதுப் மினார் அடைப்பில் உள்ளது. இது 1193 இல் குதுப்-உத்-தின் ஐபக்கால் தொடங்கப்பட்டது

Q.4) Match and choose the correct answer
1) Ramachandra 1. Kakatiya
2) Khan-i-Jahan 2. Padmavat
3) Malik MuhamadJaisi 3. Man Singh
4) Man Mandir 4. Devagiri

சரியாகப் பொருத்தி, விடையை தெரிவு செய்க.
1) ராமச்சந்திரா 1.காகதீய
2) கான்-இ-ஜஹான் 2.பத்மாவத்
3) மாலிக் முஹமத்ஜெய்சி 3.மான் சிங்
4) மன் மந்திர் 4. தேவகிரி

a) 2, 1, 4, 3 b) 1, 2, 3, 4
c) 4, 1, 2, 3 d) 3, 1, 2, 4

Solution: None

Q.5) Who laid the foundation of ‘Mamluk’ dynasty?
a) Mohammad Ghori b) Jalal-ud-din
c) Qutb-ud-din Aibak d) Iltutmish

மம்லுக் அரச வம்சத்திற்கான அடிக் கல்லை நாட்டினார் யார்?
a) முகமதுகோரி b) ஜலாலுதீன்
c) குத்புதீன் ஐபக் d) இல்துமிஷ்

Solution: Qutb-ud-din Aibak reigned for four years (1206 to 1210 CE) and died in 1210 in Lahore in
an accident while playing chaugan (Horse polo).
குத்புதீன் ஐபக் நான்கு ஆண்டுகள் (1206-1210) ஆட்சி புரிந்தார்; அவர் புத்திசாலி என்றும் நேர்மையான நிர்வாகி என்றும் பெ யரெடுத்தார் . 1210இல் லாகூரில் சௌகான் (குதிரை போலோ ) எனும் விளையாட்டின் போது நிகழ்ந்த ஒரு விபத்தில் இறந்தார் .

Q.6) Which of the following is incorrect?
a) The construction work of Qutub Minar was started by Qutbuddin Ibn.
b) Iltumish completed the construction work of Qutub Minar.
c) The Qutub Minar is facilitated by 380 steps
d) The 72.5 m high Qutub Minar was raised to 74 m due to repair work carried out by Feroz shahTughlaq

பின்வருவனவற்றுள் எது தவறானவை?
a) குதுப்மினாரின் கட்டுமான பணிகளை தொடங்கியவர் குத்புதீன் ஐபக் .
b) குதுப்மினாரின் கட்டுமான பணிகளை நிறைவு செய்தவர் இல்துமிஷ் .
c) குதுப்மினார் 380 படிகள் கொண்டது.
d) பெரோஸ் துக்ளக் மேற்கொண்ட பழுது நீக்கும் பணியால் 72.5 மீ உயரமுள்ள குதுப்மினார் 74 மீட்டராக உயர்ந்தது

Solution: குத்புதீன் ஐபக் டெல்லியில் குவ்வத்-உல்- இஸ்லாம் மஸ்ஜித் எனும் மசூதியைக் கட்டினார். அதுவே இந்தியாவிலுள்ள மிகப் பழமையான மசூதி எனக் கருதப்படுகிறது. குதுப்மினாருக்கு அவரே அடிக்கல் நாட்டினார். ஆனால் அவரால் அப்பணிகளை முடிக்க இயலாமல் போயிற்று.
2.ஐபக்கால் தொடங்கப்பட்ட குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை இல்துமிஷ் நிறைவு செய்தார்.
3.இல்துமிஷ் கட்டி முடித்த போது 72.5 மீட்டர் உயரமிருந்த குதுப் மினார், ஃபெரோஸ்
ஷா துக்ளக் மேற்கொண்ட பழுதுநீக்கும் பணிகளால் 74 மீட்டராக உயர்ந்தது. 379\ படிகள் கொண்ட மினார்,
அதன் உயரத்துக்காகவும், மாடிகளை அடையாளப்படுத்துகிற துருத்தி நிற்கிற உப்பரிகைகளுக்காகவும், படிப்படியான கோபுரச் சரிவுக்காகவும், கோபுரத்தைச் சுற்றிலுமுள்ள சரிவான விளிம்பு அலங்கரிப்புகள் ஒரு வளைவு தோற்றத்தைத் தருவதற்காகவும் சிறப்புடையது.
Qutb al-Din Ibn built a mosque called the Quwat-ul-Islam Masjid in Delhi. It is considered to be the oldest mosque in India. He himself laid the foundation for Qutub Minar. But he was unable to complete the task.
2. Iltumish completed the construction of the Qutub Minar, which was started by Ipak.
Qutub Minar, Feroz, 72.5 meters high when Iltumish was completed
Shah Tughlaq rose to 74 meters due to repair work. Minar with 379 \ steps,
Special for its height, accordion accessories that mark the floors, the gradual tower slope, and the sloping edge decorations around the tower give it a curved look

Q.7) Who was the first person in India to impose “Jizya” tax on non-Muslims?
a) Iltumish b) Alauddin Khilji
c) Qutbuddin Aibak d) Firuz Shah

இந்தியாவில் முதன்முறையாக இஸ்லாமியர் அல்லாதவர்கள் மீது “ஜிஸியா” வரியை விதித்தவர் யார்?
a) இல்துமிஷ் b)அலாவுதீன் கில்ஜி
c)குத்புதீன் ஐபக் d)பெரோஸ் ஷா

Solution: In India, Islamic rulers Qutb-ud-din Aibak imposed jizya on non-Muslims first time which was called kharaj-o-jizya. Jizya was abolished by the Mughal ruler Akbar in the 16th century but was re-introduced by Aurangzeb in the 17th century.

Q.8) Who laid the foundation of the city Tughluqabad near Delhi?
a) Muhammad-bin -Tughluq b) Firoz shah Tughluq
c) Jalal –ud-din d) Ghiyas –ud-din

டெல்லிக்கு அருகே துக்ளதாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் யார்?
a) முகமதுபின்துக்ளக் b) பிரோஸ் ஷா துக்ளக்
c) ஜலாலுதீன் d) கியாசுதீன்

Solution: கியாசுதீன் துக்ளக், பிரபுக்கள் வகுப்பினருடன்சமரசக் கொள்கையைப் பின்பற்றினார். அவரது ஐந்தாவது ஆட்சி ஆண்டில் (1325) கியாசுதீன் இறந்தார்.
Ghiyas-ud-din Tughlaq followed a policy of reconciliation with the nobles. But in the fifth year of his reign (1325) Ghiyas-ud-din died.

Q.9) Match the following
A B
1. Tughril Khan Governor of kara
2. Ala-ud-din Jalal-ud-din Yakut
3. Bahlol Lodi Governor of bengal
4. Razia Governor of sirhind

பொருத்துக:
A B
1. துக்ரில்கான் காராவின் ஆளுநர்
2. அலாவுதீன் ஜலாலுதீன் யாகுத்
3. பகலூல் லோடி வங்காள ஆளுநர்
4. ரஸ்ஸியா சிர்கந்தின் ஆளுநர்

a) 3 1 4 2 b) 1 2 3 4 c) 2 3 4 1 d) 2 4 1 2

Solution: None

Q.10) Find out the correct statement
a) The agricultural department, Diwan-i-Kohi was established by Alauddin Khalji.
b) Alai Darwaza was built by Mahmud-bin-Tughlaq.
c) The department called Diwan-i-Khairat was created by Firoz Tughlaq to take care of orphans and widows.
d) Iltutmish introduced the Persian festival of Nauroz to impress the nobles and people.

பின்வரும் கூற்றுகளில் எது சரியானவை
a) அலாவுதீன் கில்ஜி திவானி-இ-கோஹி என்ற வேளாண் துறையை நிறுவினார்
b) அலாய் தர்வாசா நுழைவு வாயிலை கட்டியவர் முகமது பின் துக்ளக்
c) அனாதைகளுக்கும் கைம்பெண்களுக்கும் ஆதரவளிக்க திவானிகரத் என்ற புதிய துறையை பிரோஷா துக்ளக் ஏற்படுத்தினார்.
d) உயர் குடியினரையும் மக்களையும் வசீகரிப்பதற்காக பாரசீகத்திருவிழாவான நௌரஸ் திருவிழாவை இல்துமிஷ் அறிமுகப்படுத்தினார்

Solution: Alauddin Khilji created Diwan-i-Riyasat and Shabha-i-Mandi to regulate fixed market prices. Muhammad Bin Tughlaq set up an agricultural department Diwan-i-amir-i-kohi to improve cultivation. Feroz Shah Tughlaq established a new department called Diwan-i- Khairat (Department of Charity) to take care of orphans and widows. Free hospitals like Dar-ul-Shafa and marriage bureaus for poor Muslims were also established. He has also created the department of slaves or Diwan-i-Bandagan

Q.11) Find out the wrong statement
a) In order to save Qutb-ud-din Aibak infant Turkish Empire, he made many matrimonial alliances.
b) Qutb-ud-din Aibak shifted his capital to Delhi
c) Iltutmish was the founder of the Turkish dominion in India.
d) Qutb-ud-din-Aibak was a plous Muslim. His administration was purely based on his military strength.

பின்வருவனவற்றுள் தவறானது எது?
a) குத்புதீன் துருக்கிய மரபு அரசைக் காப்பாற்றிக் கொள்ள பல திருமணத் தொடர்புகளை ஏற்படுத்தினார்.
b) குத்புதீன் தனது தலைநகரை டெல்லிக்கு மாற்றினார்
c) இந்தியாவில் துருக்கிய ஆதிக்கத்தைத் தொடங்கி வைத்தவர் இல்துமிஷ் ஆவார்.
d) இஸ்லாமிய மதப்பற்றாளராகிய குத்புதீன் ஐபக் தனது ஆட்சியை நிலைநிறுத்த இராணுவத்தின் வலிமையை பயன்படுத்தினார்.

Solution: The real founder of the Turkish empire in India was Qutub-ud-din Aibak.
இந்தியாவில் துருக்கிய சாம்ராஜ்யத்தின் உண்மையான நிறுவனர் குதுப்-உத்-தின் ஐபக் ஆவார்.

Q.12) Who died after he fell from his horse while playing polo?
a) Qutb-ud-din Aibak b) Iltutmish
c) Balban d) Raziah

போலோ விளையாடிக் கொண்டிருந்தபோது நிலைதடுமாறி விழுந்து இறந்த அரசர் யார்?
a) குத்புதீன் ஐபக் b) இல்துத்மிஷ்
c) பால்பன் d) ரசியா

Solution: Qutb-ud-din Aibak reigned for four years (1206 to 1210 CE) and died in 1210 in Lahore in an accident while playing chaugan (Horse polo).
ஐபக் நான்கு ஆண்டுகள் (1206-1210) ஆட்சி புரிந்தார்; அவர் புத்திசாலி என்றும் நேர்மையான நிர்வாகி என்றும் பெ யரெடுத்தார் .1210இல் லாகூரில் சௌகான் (குதிரை போலோ ) எனும் விளையாட்டின் போது நிகழ்ந்த ஒரு விபத்தில் இறந்தார்.

Q.13) Find out the statement not related to Iltutmish?
1. He nominated his daughter Raziah as his successor.
2. He set up Iqtas under Iqtadars.
3. The army was maintained by ‘A crops of Forty’.
4. He was the second Turkish ruler to introduce Arabic coinage.
5. He introduced poibosa form of salutation to the king.

பின்வருவனவற்றுள் இல்துத்மிஷ் உடன் தொடர்பில்லாதது எது?
1) தனது மகள் சுல்தானா இரசியாவை நாட்டின் அரசியாக அறிவித்தார்.
2) நாட்டினை இக்தாக்களாகப் பிரித்தார்.
3) படைப்பிரிவில் ‘நாற்பதின்மார் குழு என்ற முறையில் படைப்பிரிவு நிர்வகிக்கப்பட்டது.
4) அரேபிய மொழியில் நாணயங்கள் வெளியிட்ட இரண்டாவது துருக்கியர் இவர்
5) பைபோஸ் என்னும் புதிய வணக்க முறையை நடைமுறைப்படுத்தினார்.

a) 1,2,3 b) 4,3,5
c) 4,5 d) 2,3,4

Solution: 1.இல்துமிஷ் தனது படைகளில் பணியாற்றியோர்க்கு ’இக்தாக்களை’ (நிலங்கள்) வழங்கினார். “இக்தா” என்பது
ராணுவஅதிகாரிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்திற்காகக் கொடுக்கப்பட்ட நிலமாகும்.
2.இல்துமிஷ் தனது மகளான ரஸ்ஸியா சுல்தானாவைத் தனக்குப் பின்னர் டெல்லியின் அரியணைக்கான வாரிசாக அறிவித்தார்.
3.இல்துமிஷ் மங்கோலியர்கள் தாக்குதல் மேற்கொண்டால் அதை எதிர்கொள்வதற்காகத் துருக்கியப் பிரபுக்கள் நாற்பதுபேரைக் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினார். அக்குழு “சகல்கானி” அல்லது நாற்பதின்மர் என அறியப்பட்டது
1.Iltutmish granted iqtas (land) to members of his army. Iqta is the land granted to army officials in lieu of a regular wage. The iqta holder is called the iqtadar or muqti who had to provide the Sultan with military assistance in times of war.
2.As the most capable son of Iltutmish, Rukn-ud- din-Firuz, was dead, Iltutmish nominated his daughter Razia Sultana as his successor to the throne of Delhi.
3.In order to counter the possible attack of the Mongols, Iltutmish organised Turkish nobility into a select group of 40 nobles known as chahalgani or The Forty.

Q.14) The period of sultana Raziah was
a) 1236-1240 A.D b) 1240-1244 A.D
c) 1326-1330 A.D d) 1300-1340 A.D

சுல்தான்கள் வரிசையில் வந்த பெண்ணரசி ரசியா ஆட்சி செய்த காலம் எது?
a) கி.பி. 1236-1240 b) கி.பி. 1240-1244
c) கி.பி. 1326-1330 d) கி.பி. 1300-1340

Solution: இரஸியா சுல்தானா (1236-1240). இவர் பேரரசர் இல்துமிஷின் மகள். இரஸியா அரியணை ஏறுவதற்கு துருக்கிய பிரபுக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இவர்களால் ஏற்படுத்தப்பட்ட ஏராளமான தடைகளைக் கடந்தே இரஸியா பேரரசியாகப் பதவி ஏற்றார். மொராக்கோ நாட்டைச் சேர்ந்த பயணி, இபின் பதூதாவின் கூற்றுப் படி ‘குதிரை மீது ஆண்கள் சவாரி செய்வதைப் போல், கையில் வில் அம்புடன், அரச பரிவாரங்கள் சூழ இரஸியாவும் சவாரி செய்தார். தனது முகத்துக்கு அவர் திரையிடவில்லை’.
Raziya Sultana (1236-1240). Raziya was daughter of Iltutmish, who ascended the throne after a lot of hurdles put up by the Turkish nobles. According to Ibn Battuta, the Moroccan traveller, ‘Raziya rode on horseback as men ride, armed with a bow and quiver, and surrounded by courtiers. She did not veil her face.’

Q.15) In which year did Sikander Lodi Changed his capital from Delhi to Agra?
சிக்கந்தர் லோடி எந்த ஆண்டு தலைநகரை தில்லியிலிருந்து ஆக்ராவிற்கு மாற்றினார்?
a)1517 b)1504
c)1501 d)1489

Solution: லோடி வம்ச ஆட்சியை நிறுவியவர் பஹ்லுல் லோடி ஆவார். இவரது ஆட்சியின்போது வங்கத்தில்
ஆட்சி புரிந்த ஷார்கி அரசு கைப்பற்றப்பட்டது. இவரது மகன் சிக்கந்தர்லோ டி (1489- 1517) 1504இல் தலைநகரை
தில்லியிலிருந்து ஆக்ராவுக்கு மாற்றினார். கடைசி லோ டி ஆட்சியாளரான இப்ராஹிம் லோடி, முகலாய வம்ச
ஆட்சியை நிறுவிய முதலாம் பானிபட் போரில் (1526) பாபரிடம் தோற்றார்.

The Lodi Dynasty was established by Bahlul Lodi (1451–1489) whose reign witnessed the conquest of Sharqi Kingdom (Bengal). It was his son Sikander Lodi (1489–1517) who shifted the capital from Delhi to Agra in 1504. The last Lodi ruler Ibrahim Lodi was defeated by Babur in the First Battle of Panipat (1526), which resulted in the establishment of Mughal Dynasty.

Q.16) Which of the following statement about Amirkusru is correct?
1. Amirkusru is an important figure in Persian prose and poetry.
2. Amirkusru is proud to call himself an Indian.
3.Amirkusru written a book “Fawai Tul Fawad

a)1 and 2 only b)1 and 3 only
c)2 and 3 only d)3 only

கீழ்கண்டவற்றில் அமிர்குஸ்ரு பற்றிய கூற்றில் எது சரியானவை ?
1.பாரசீக உரைநடையிலும், கவிதையிலும் ஒரு முக்கியமான நபராக விளங்குபவர் அமிர்குஸ்ரு.
2.தன்னை ஒரு இந்தியன் என்று அழைத்துக்கொள்வதில் பெருமிதம் கொண்டவர் அமிர்குஸ்ரு .
3.அமிர்குஸ்ரு எழுதிய நூல் “ஃபவாய் துல் ஃபவாத்”.

a) 1 மற்றும் 2 b) 1 மற்றும் 3
c) 2 மற்றும் 3 d) 3 மட்டும்

Solution: பாரசீக உரைநடையிலும் கவிதையிலும் ஒரு முக்கியமான நபராக விளங்குபவர் அமிர் குஸ்ரு.
தமது ”ஒன்பது வானங்கள்” (Nu Siphr) நூலில் தம்மை ஓர் இந்தியன் என்று அழைத்துக்கொள்வதில் அவர் பெருமிதம் கொள்கிறார்.
Amir Khusrau emerged as a major figure of Persian prose and poetry. Amir Khusrau felt elated to call himself an Indian in his Nu Siphr (‘Nine Skies’). In this work, he praises India’s climate, its languages – notably Sanskrit – its arts, its music, its people, even its animals.

Q.17) The Khilji dynasty came to an end in
a) 1320 A.D b) 1322 A.D
c) 1310 A.D d) 1316 A.D

கில்ஜி மரபு முடிவுக்கு வந்த ஆண்டு
a) கி.பி. 1320 b) கி.பி. 1322
c) கி.பி. 1310 d) கி.பி. 1316

Solution: The Khaljis (1290-1320) Jalal-ud-din Khalji (1290-1296) Ala-ud-din Khalji (1296–1316), கில்ஜிகள் (1290-1320) ஜலாலுதீன் கில்ஜி (1290-1296): அலாவுதீன் கில்ஜி (1296-1316)

Q.18) The original name of muhammed-bin-Tughlaq was
a) Ghazi Malik b) Junakhan
c) Firoz d) Deen Muhammed

முகமது பின் துக்ளக்-ன் இயற்பெயர் என்ன?
a) காஸிமாலிக் b) ஜூனாகான்
c) பெரோஸ் d) தீன் முகமது

Solution: கியாசுதீன் துக்ளக், பிரபுக்கள் வகுப்பினருடன் சமரசக் கொள்கையைப் பின்பற் றினார். அவரது ஐந்தாவது ஆட்சி ஆண்டில் (1325) கியாசுதீன் இறந்தார். மூன்று நாள்கள் கழித்து ஜானாகான் என்ற இயற்பெயர் கொணட அவரது மகன் ஆட்சிக்கட்டில் ஏறியதோடு முகமது–பின்-துக்ளக் எனும் பட்டத்தை சூட்டிக்கொண்டார்.
Ghiyas-ud-din Tughlaq followed a policy of reconciliation with the nobles. But in the fifth year of his reign (1325) Ghiyas-ud-din died. Three days later Jauna Khan ascended the throne and took the title Muhammad bin Tughlaq.

Q.19) Find out the correct statement:
1. While attending a reception for his victories at Bengal the pavilion on which he stood gave way and Ghiyas-us-din was crushed to death in 1325.
2. Muhammad-bin-Tughlaq captured Warangal in 1327 A.D

a) 1 b) 2
c) 1,2 d) Both are wrong

கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
1) கியாசுதீன் துக்ளக் கி.பி. 1325 ல் வங்கப்பகுதியை வென்றார். அந்த வெற்றியை கொண்டாட அமைக்கப்பட்ட மேடை சரிந்து இறந்தார்.
2) முகமது பின் துக்ளக் கி.பி. 1327ல் வாராங்கல் பகுதியைக் கைப்பற்றினார்.

a) 1 மட்டும் சரி b) 2 மட்டும் சரி
c) 1,2 இரண்டும் சரி d) 1,2 இரண்டும் தவறு

Solution: None

Q.20) Which of the following statements is correct?
1. Razia appoints Jalaluddin Yakut, an Ethiopian slave, as his personal attendant
2. Razia also faced a brutal Mongol invasion of Punjab.
3. Killed in 1260 by a conspiracy by Turkish nobles against Razia

a) 1 only b) 1 and 2
c) 1, 2 and 3 d) None of these

பின்வரும் கூற்றுகளில் எது சரியானவை?
1. ரஸ்ஸியா, ஜலாலுதீன் யாகுத் எனும் எத்தியோப்பிய அடிமையைத் தனது தனி உதவியாளராக நியமித்தார்
2. ரஸ்ஸியா,பஞ்சாபின் மீதான மூர்க்கம் நிறைந்த மங்கோலியரின் தாக்குதலையும் எதிர்கொள்ள நேர்ந்தது.
3. ரஸ்ஸியாக்கு எதிராகத் துருக்கிய பிரபுக்கள் செய்த சதியால் 1260 இல் கொலையுண்டார்

a) 1 மட்டும் b) 1 மற்றும் 2
c) 1, 2 மற்றும் 3 d) இவற்றில் எதுமில்லை

Solution: இரஸியா சுல்தானா (1236-1240) : இவர் ஜலாலுதீன் யாகுத் என்ற ஓர் அபிசீனிய அடிமையை அவர் குதிரைஇலாயப் பணித்துறைத் தலைவராக (அமீர்-இ-அகுர்) ஓர் உயர்ந்த பதவியில் அமர்த்தினார். இது, துருக்கிய பிரபுக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. யாகுத்துக்கும் அரசி இரஸியாவுக்கும் இருந்த நெருக்கத்தைப் பெரிதுபடுத்த, பிரபுக்கள், அரசியைப் பதவியிலிருந்து இறக்க முயன்றனர். இரஸியாவுக்குப்பொதுமக்கள் ஆதரவு இருந்ததால், தில்லியில் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தெற்குப் பஞ்சாபில் கலகக்கார ஆளுநர் அல்துனியாவைத் தண்டிப்பதற்கு அவர் நடவடிக்கை மேற்கொண்டிருந்த சந்தர்ப்பத்தை ச் சதிகாரர்கள் பயன்படுத்தி அவரை ஆட்சியிலிருந்து அகற்றினர்.
Raziya Sultana (1236-1240). According to Ibn Battuta, the Moroccan traveller, ‘Raziyarode on horseback as men ride, armed with a bow and quiver, and surrounded by courtiers. Shedid not veil her face.’ Yet Raziya ruled for only three and half years. The elevation of an Abyssinianslave, Jalal-ud-din Yaqut, to the post of Amir-i-Akhur, Master of the Stables, a very high office, angered the Turkish nobles. The nobles overplayed her closeness with Yakut and tried to deposeher. Since Raziya enjoyed popular support, they could not do anything in Delhi. But while she was on a punitive campaign against the rebel governor Altuniya in southern Punjab, the conspirators used that occasion to dethrone her.

Q.21) Match the following:
List – I List – II
A) Khams 1.Hospitals
B) Kharaj 2.Poll Tax
C) Jizya 3.Marriage Bureau
D) Zakat 4.1/5 of the warbooty
E) Dar-ul-shafa 5.1/10 of the Produce of the land
F) Diwan-i-Kherat 6.Religious purpose Tax

பொருத்துக
A) கம்ஸ் 1. மருத்துவமனை
B) கரோஜ் 2. தலைவரி
C) பெஸியா 3. திருமண அமைப்பு
D) ஜகாத் 4. பொருட்களில் 1/5 பங்கு
E) தார்-உல்-பா 5. விளைச்சலில் 1/10 பங்கு
F) திவானி கிரமத் 6. சடங்கு கட்டணம்

a) 4 5 2 6 1 3 b) 4 5 1 2 3 6
c) 1 2 5 6 4 3 d) 4 1 2 3 5 6

Solution: None

Q.22) Which of the following is correct about Timur’s invasion?
1. Timur took advantage of India’s weakness and invaded India and plundered Delhi in December 1398.
2. Punjab is the second most affected area after Delhi by Timur’s invasion.
a) 1 only b) 2 only
c) Both are correct d) None of these

பின்வருவனவற்றுள் தைமூர் படையெடுப்பு பற்றிய கூற்றில் எது சரியானது?
1.தைமூர் இந்தியாவின் வலிமையின்மையைச் சாதகமாக்கிக்கொண்டு இந்தியாவிற்குள் படையெடுத்து நுழைந்து 1398 டிசம்பர் மாதத்தில் டெல்லியைக் கொள்ளையடித்தார்.
2.தைமூரின் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்ததாக அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதி பஞ்சாப் ஆகும்.

a)1 மட்டும் b) 2 மட்டும்
c) இரண்டும் சரி d) இவற்றில் ஏதுமில்லை

Solution: இந்தியாவின் வலிமையின்மையைச் சாதகமாக்கிக்கொண்டு இந்தியாவிற்குள் படையெடுத்து நுழைந்து 1398 டிசம்பர் மாதத்தில் டெல்லியைக் கொள்ளையடித்தார். தைமூரின் படையெடுப்பால் டெல்லிக்கு அடுத்ததாக அதிகம் பாதிப்புக்கு உள்ளான பகுதி பஞ்சாப் ஆகும்.
Taking advantage of India’s weakness, he entered India in December 1398 and plundered Delhi. Punjab, besides the Delhi city, was the province that suffered most by Timur’s raid.

Q.23) Which of the following statements is incorrect about the slave dynasty?
1.Muslim rule in India was established by Muhammad Ghori in 12th century A.D.
2. After Muhammad Ghori’s death in 1215, one of his slaves Qutb-ud-din- Aibak proclaimed himself ruler of the Turkish territories in India.

a) 1 only b) 2 only
c) 1 and 2 d) None of these

பின்வரும் கூற்றுகளில் அடிமை வம்சத்தை பற்றிய தவறான கூற்று எது?
1. இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி முகமது கோரியால் கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது.
2. முகமது கோரி 1215-இல் இறந்த பின்னர், அவரின் அடிமையான குத்புதீன் ஐபக் அரசராக தன்னை அறிவித்துக்கொண்டார்.

a) 1 மட்டும் b) 2 மட்டும்
c) 1 மற்றும் 2 d) இவற்றில் எதுமில்லை

Solution: இந்தியாவில் முஸ்லீம்களின் ஆட்சி முகமது கோரியால் கி.பி. (பொ.ஆ) 12 ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. 1206ல் கோரியின் இறப்பிற்குப் பின்னர், அவரின் அடிமையான குத்புதீன் ஐபக் இந்தியாவிலிருந்த துருக்கியப் பகுதிகளுக்கு அரசராக தன்னை அறிவித்துக்கொண்டார். அடிமை வம்சத்தின் ஆட்சிக்கான அடிக்கல்லை அவர் நாட்டினார்.
Muslim rule in India was established by Muhammad Ghori in 12th century A.D. (CE). After Ghori’s death in 1206, one of his slaves Qutb-ud-din- Aibak who had been left behind by Muhammad Ghori to govern the territories he had conqured,
proclaimed himself ruler of the Turkish territories in India. He laid the foundation of the Slave Dynasty.

Q.24) Who was the founder of sayyid dynasty?
a) Mubarak shah b) Muhammed Shah
c) Khizrkhan d) Alauddin shah

சையது மரபினைத் தோற்றுவித்தவர் யார்?
a) முபாரக்ஷா b) முகமது ஷா
c) கிஸிர்கான் d) அலாவுதீன்ஷா

Solution:
பஞ்சாப் போர் அணிவகுப்புகளில் தன் நலன்களை மேற்பார்வை பார்ப்பதற்கு கிசர்கானைத் தனது துணையாக நியமித்தார் தைமூர். கிசர் கான் (1414-1421) தானே சென்று தில்லியைக் கைப்பற்றி சையது வம்ச ஆட்சியை நிறுவினார். கிசர் கான் நிறுவிய சையது வம்சத்தில், 1451 வரையிலும் நான்கு சுல்தான்கள் ஆண்டனர்.
Timur appointed Khizr Khan as his deputy to oversee Timurid interests in the Punjab marches. Khizr Khan (1414-21) went on to seize Delhi and establish the Sayyid dynasty (1414–51).The Sayyid dynasty established by Khizr Khan had four sultans ruling up to 1451.

Q.25) Match the following:
A) Jalal-ud-din Khilji 1. 1290-1296 A.D
B) Ala-ud-din Khilji 2. 1296-1316 A.D
C) Qutb-ud-din Mubarak shah 3. 1316-1320 A.D
D) Nasir-ud-din Khusrav shah 4. 1320 A.D

பொருத்துக
A) ஜலாலுத்தீன் பெரோஸ் கில்ஜி 1. கி.பி. 1290-1296
B) அலாவுத்தீன் கில்ஜி 2. கி.பி. 1296-1316
C) குதுப்-உத்-தீன்-முபாரக்ஷா 3. கி.பி. 1316-1320
D) நஸிர்-உத்தீன்-குஸ்ரு-ஷா 4. கி.பி. 1320

a) 4 3 2 1 b) 1 2 3 4
c) 1 2 4 3 d) 3 4 1 2

Solution: None

Q.26) Match the following:
A) Ghiyas-ud-din 1. 1325-1361 A.D
B) Muhammed-bin Tughlaq 2. 1414-1421 A.D
C) Firoz Tughluq 3. 1320-1325 A.D
D) Khizr Khan 4. 1351-1388 A.D
E) Alauddin Shah 5. 1421-1434 A.D
F) Mubarak Shah 6. 1445-1457 A.D

பொருத்துக
A) கியாசுதீன் 1. கி.பி. 1325-1361
B) முகமது பின் துக்ளக் 2. கி.பி. 1414-1421
C) பிரோஸ் துக்ளக் 3. கி.பி. 1320–1325
D) கிஸிர்கான் 4. கி.பி. 1351-1388
E) அலாவுதீன் ஷா 5. கி.பி. 1421-1434
F) முபாரக் ஷா 6. கி.பி. 1445-1457

a) 3 1 2 4 5 6 b) 3 1 4 2 6 5
c) 1 2 3 4 5 6 d) 6 4 3 2 1 5

Solution: None

Q.27) The Last Delhi sultanate in India?
a) Khilji b) Lodi
c) Tughluq d) Sayyid

டெல்லியை ஆண்ட சுல்தான்களில் இறுதியாக ஆட்சி செய்த மரபு-எது?
a) கில்ஜி b) லோடி
c) துக்ளக் d) சையது

Solution:
லோடி வம்ச ஆட்சியை நிறுவியவர் பஹ்லுல் லோடி ஆவார். இவரது ஆட்சியின்போது வங்கத்தில் ஆட்சி புரிந்த ஷார்கி அரசு கைப்பற்றப்பட்டது. இவரது மகன் சிக்கந்தர்லோ டி (1489-1517) 1504இல் தலைநகரை தில்லியிலிருந்து ஆக்ராவுக்கு மாற்றினார். கடைசி லோடி ஆட்சியாளரான இப்ராஹிம் லோடி, முகலாய வம்ச ஆட்சியை நிறுவிய முதலாம் பானிபட் போரில் (1526) பாபரிடம் தோற்றார்.
The Lodi Dynasty was established by Bahlul Lodi (1451–1489) whose reign witnessed the conquest of Sharqi Kingdom (Bengal). It was his son Sikander Lodi (1489–1517) who shifted the capital from Delhi to Agra in 1504. The last Lodi ruler Ibrahim Lodi was defeated by Babur in the First Battle of Panipat (1526), which resulted in the establishment of Mughal Dynasty.

Q.28) The First battle of panipat in 1526 A.D held between
a) Sikandar shahi-Babur
b) Daulat khan lodi-Babur
c) Ibrahim Lodi-Babur
d) Dilwar khan lodi-Babur

கி.பி. 1526ல் நடைபெற்ற முதலாம் பானிபட் போர் யார் யாருக்கிடையே நடைபெற்றது?
a) சிக்கந்தர் லோடி-பாபர்
b) தௌலத்கான் லோடி-பாபர்
c) இப்ராகிம் லோடி-பாபர்
d) தில்வர்கான் லோடி-பாபர்

Solution:
கடைசி லோடி ஆட்சியாளரான இப்ராஹிம் லோடி, முகலாய வம்ச ஆட்சியை நிறுவிய முதலாம் பானிபட் போரில் (1526) பாபரிடம் தோற்றார் .
The last Lodi ruler Ibrahim Lodi was defeated by Babur in the First Battle of Panipat (1526), which resulted in the establishment of Mughal Dynasty.

Q.29) Why the Delhi sultanate in India came to an end?
a) First Battle of Panipat
b) Administrative problems
c) High Tax imposed on Hindus
d) They insult the high class people

டெல்லி சுல்தான்களின் ஆட்சி முடிவுக்கு வர காரணமாக அமைந்தது?
a) முதலாம் பானிபட்போர்
b) நிர்வாகக் குளறுபடி
c) இந்துக்கள் மீது கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
d) உயர்குடியினரை அவமானப்படுத்தினார்கள்

Solution: Babur defeated and killed Ibrahim Lodi in the Battle of Panipat in 1526. The death of Ibrahim Lodi ended the Delhi Sultanate, and the Mughal Empire replaced it.
1526 இல் பானிபட் போரில் பாபர் இப்ராஹிம் லோடியை தோற்கடித்து கொன்றார். இப்ராஹிம் லோடியின் மரணம் டெல்லி சுல்தானை முடிவுக்கு கொண்டுவந்தது, முகலாய பேரரசு அதை மாற்றியது

Q.30) Who was the founder of Tughluq dynasty?
a) Jalal ud-din b) Ghiyas ud-din
c) Iltutmish d) Balban

துக்ளக் அரச வம்சத்தைத் தோற்றுவித்தவர் யார்?
a) ஜலாலுதீன் b) கியாசுதீன்
c) இல்துமிஷ் d) பால்பன்

Solution:
கியாசுதீன் துக்ளக், பிரபுக்கள் வகுப்பினருடன் சமரசக் கொள்கையைப் பின்பற்றினார். அவரது ஐந்தாவது ஆட்சி ஆண்டில் (1325) கியாசுதீன் இறந்தார்.
Ghiyas-ud-din Tughlaq followed a policy of reconciliation with the nobles. But in the fifth year of his reign (1325) Ghiyas-ud-din died.

Answers:

1 a 11 c 21 a
2 a 12 a 22 c
3 a 13 c 23 b
4 c 14 a 24 c
5 c 15 b 25 b
6 c 16 a 26 b
7 c 17 a 27 b
8 d 18 b 28 c
9 a 19 c 29 a
10 c 20 b 30 b

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!