அதிக சம்பளம் கிடைக்கும் வேலைகள் என்னென்ன தெரியனுமா..?? ” நீங்களும் விண்ணப்பிக்கலாம்”…!!
பள்ளி படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு அடுத்த கட்ட முடிவுகளை எடுப்பதில் சில சிக்கல்கள் இருந்து வருகின்றன. அதில் ஒன்று உயர் படிப்புகளில் எந்த துறையை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற கேள்வி தான். மேலும், படித்து முடித்தவுடன் வேலை கிடைக்குமா? சம்பளம் எவ்வளவு கிடைக்கும்? டென்ஷன் இல்லாமல் இருக்குமா? இதர சலுகைகள் கிடைக்குமா? என்ற எக்கச்சக்கமான குழப்பங்கள் மாணவர்களிடையே அதிகரித்து காணப்படுகிறது. அந்த கவலையை போக்கும் விதமாக, நடப்பாண்டு முதல் வருங்காலத்தில் எந்த துறை சார்ந்த தொழில்கள் சிறந்து விளங்கும் என்பதை கீழே விரிவாக தொகுத்து வழங்கியுள்ளோம். இதை நீங்கள் பின்பற்றி உங்கள் உயர்கல்வி படிப்புகளை தேர்ந்தெடுக்கலாம்.
1. AI இன்ஜினீயர்: தற்போது அனைத்தும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்படுவதால், வருங்காலத்தில் இதன் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கக்கூடும். இதற்கு, நீங்கள் B.Tech அல்லது Computer Science எடுக்க வேண்டும். மேலும், அமேசான், கூகுள், மற்றும் IBM நிறுவனங்களில் இத்துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் நிரம்பியுள்ளன. ஒரு ஆண்டுக்கு ரூ.7 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
2. Business Analytics: தொழில் மேம்பாடு, செயல்பாடு மாடல்கள் மற்றும் தொழில் துறையில் சிறந்து விளங்கும் வழிமுறைகளை எடுத்துரைக்கும் கல்வி “Business Analytics” ஆகும். Economics, Business Analytics, Data Science, Statistics முதலிய படிப்புகளை படித்தவர்கள் இந்த வேலையில் சேரலாம். ஒரு ஆண்டுக்கு ரூ. 7 லட்சத்திற்கும் மேல் ஊதியம் கிடைக்கும். மேலும், அமேசான், microsoft நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் குவிந்துள்ளன.
3. Marketing Manager:ஒரு நிறுவனத்தின் பொருளை விற்பனை செய்து வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதே இதன் நோக்கமாகும். இதற்கு marketing management, business administration அல்லது MBA படித்தால், இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், ஆண்டு வருமானம் 12 லட்சம் மேல் உங்களுக்கு ஊதியம் கிடைக்கும் அருமையான வேலை ஆகும்.
இனி, வீட்டிலிருந்தே சொத்து பட்டாவை மாற்றலாம்…!! “விண்ணப்பிக்கும் முறை உள்ளே”..!!
4.CA: அனைத்து விதமான தொழில் நிறுவனங்களின் நிதியை மேலாண்மை செய்வதே இதன் முக்கிய நோக்கமாக உள்ளது. இதற்கு, ICAI படிப்பு சான்றிதழ் பெற்றிருந்தால் போதும். இப்பணிக்கு ஆண்டு வருமானம் ரூ.9 லட்சம் முதல் ரூ.36 லட்சம் வரை கிடைக்கும்.
5. Full Stack Developer: இன்றைய காலகட்டத்தில் அதிக டிமாண்டில் இருப்பது இந்த வேலை தான். எனவே மாணவர்களே இந்த துறையில் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்றால், computer science, B.Tech, front end, back end படிக்க வேண்டும். இதற்கு ஆண்டு வருமானம் ரூ. 9 லட்சத்திற்கு மேல் கிடைக்கும்.
மேலும், Data Scientist, Blockchain Developer, Product Manager, Medical முதலிய படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதன் மூலம் அதிக வருவாயை நீங்கள் பெற முடியும்.

























